- Home
- Lifestyle
- Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Baba Vanga Predictions: உலகின் மிகவும் பிரபலமான தீர்க்கதரிசிகளில் ஒருவரான பாபா வாங்காவின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா, தனது வாழ்நாளில் பல கணிப்புகளை கூறியுள்ளார்.

பாபா வாங்கா
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. சிறுவயதில் பார்வையை இழந்த இவர், தனது அமானுஷ்ய உள்ளுணர்வு மூலம் உலக நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் மற்றும் அரசியல் மாற்றங்களை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் உலகப் பிரசித்தி பெற்றவர். இந்நிலையில் பாபா வாங்காவின் ற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தனது வாழ்நாளில் எதிர்காலத்தைப் பற்றிக் கூறியதாக நம்பப்படும் சில அதிரடியான கணிப்புகளின் பட்டியல் வெளியாகி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2026-ல் நாம் இருக்கும் இந்தச் சூழலில், வரும் நூற்றாண்டுகளில் மனிதகுலத்திற்கு என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன என்று பாபா வாங்கா பெயரில் உலா வரும் அந்த சுவாரசியமான கணிப்புகளை பார்க்கலாம்.
புதிய ஆற்றல் மூலம்
2025-ல் ஐரோப்பாவின் மக்கள் தொகை கணிசமாகக் குறையலாம் என பாபா வாங்கா பெயரில் ஒரு கணிப்பு பரவியது. அதோடு, மனிதகுலம் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் ஆற்றலையும் உருவாக்கும் என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. 2028-ல் மனிதர்கள் ஒரு புதிய ஆற்றல் மூலத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் வெள்ளி கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி நடக்கும் என்றும் பாபா வாங்காவின் கணிப்புகள் பட்டியலில் உள்ளது.
பொருளாதாரத்தில் பெரிய மாற்றம்
2033 தீவிரமடையும் காலநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, உலகளவில் கடல் மட்டம் ஆபத்தான நிலைக்கு உயரும். 2043 - உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் தலைகீழாக மாறும்.
சமூக அமைப்புகளில் பெரிய மாற்றங்கள்
2046 மருத்துவத் துறையில் புரட்சிகரமான வளர்ச்சி ஏற்பட்டு, செயற்கை உறுப்புகள் சாதாரணமாகிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் எளிதாகலாம். 2066-ல் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் உருவாக்கப்படலாம் என்றும், 2076-ல் சமூக அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் சில பதிவுகள் கூறுகின்றன.
செயற்கை சூரியன் உருவாக்கம்
2100 முதல் 5079 வரை: அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் செயற்கை சூரியன் உருவாக்கம், வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு, உலகளாவிய பஞ்சம், செவ்வாய் கிரகத்தில் போர், இறுதியாக 5079-ல் உலகம் அழிவது போன்ற பல ஆச்சரியமான கணிப்புகள் இந்தப் பட்டியலில் உள்ளன. ஆனால், இவற்றின் நம்பகத்தன்மை குறித்து நிபுணர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாபா வாங்கா பெயரில் பரவும் பல கணிப்புகளுக்கு அதிகாரப்பூர்வமான பதிவுகள் இல்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

