MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Training: அசால்டா மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஒரே நாள் பயிற்சி தரும் ஒராயிரம் வாய்ப்புகள்.! நீங்க ரெடியா?!

Training: அசால்டா மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஒரே நாள் பயிற்சி தரும் ஒராயிரம் வாய்ப்புகள்.! நீங்க ரெடியா?!

தமிழக அரசின் EDII-TN நிறுவனம், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி சார்ந்த தொழில் தொடங்க ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு மானியத்துடன் சொந்தத் தொழில் தொடங்கி வெற்றிகரமான முதலாளியாக மாறலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 12 2026, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஆசையெல்லாம் நிறைவேறும் மக்களே.!
Image Credit : Asianet News

ஆசையெல்லாம் நிறைவேறும் மக்களே.!

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால், "என்ன தொழில் செய்வது? அதற்குப் பயிற்சி எங்கே கிடைக்கும்?" என்ற தயக்கத்தில் பலரது கனவுகள் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. உங்கள் தயக்கத்தை உடைத்து, உங்களை ஒரு வெற்றிகரமான முதலாளியாக மாற்ற இதோ ஒரு பொன்னான வாய்ப்பு!தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN) வழங்கும் இந்த ஒரு நாள் பயிற்சி, உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகிறது.

26
பயிற்சி 1: சிறுதானியங்கள் மற்றும் தொக்கு சாதம் மிக்ஸ்
Image Credit : Asianet News

பயிற்சி 1: சிறுதானியங்கள் மற்றும் தொக்கு சாதம் மிக்ஸ்

எதிர்காலத்தின் "சூப்பர் ஃபுட்": சிறுதானியங்கள்,  பாரம்பரிய அரிசி 

இன்று சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை அனைத்திற்கும் தீர்வாக மக்கள் தேடுவது சிறுதானியங்களையும் (Millets), பாரம்பரிய அரிசி (Traditional Rice) வகைகளையும் தான். இந்தத் துறையில் நீங்கள் கால் பதித்தால், லாபம் என்பது உறுதி!

சமைக்க நேரமில்லாத இன்றைய அவசர உலகில், இன்ஸ்டன்ட் (Instant) உணவுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சிறுதானிய உணவுகள் மற்றும் பாரம்பரிய "தொக்கு" வகைகளை வணிக ரீதியாகத் தயாரிப்பது எப்படி? என்பதைச் சேலத்தில் நேரடிப் பயிற்சியாகக் கற்கலாம்.

  • தேதி: மார்ச் 14, 2026 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 9:00 - மாலை 5:00
  • இடம்: ஹோட்டல் கிராண்ட் எஸ்டான்சியா / SPC பவன், சேலம்.
  • கட்டணம்: ₹1,250/-
  • தொடர்புக்கு: 9840953738

Related Articles

Related image1
காலியாக உள்ள ப்ளாட்டில் பணம் சம்பாதிக்கலாம்! இதை செய்தால் 100% வருமானம் கிடைக்கும்!
Related image2
குறைந்த வட்டி, அதிக லாபம்.! 2026-ல் தமிழ்நாட்டில் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் தரும் 5 சிறந்த வங்கிகள்.!
36
பயிற்சி 2: பாரம்பரிய அரிசி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்
Image Credit : Asianet News

பயிற்சி 2: பாரம்பரிய அரிசி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

வீட்டில் இருந்தபடியே சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு. பாரம்பரிய அரிசியை மாவு, பிஸ்கட், அவல் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது எப்படி? என்ற நுணுக்கங்களை ஆன்லைனிலேயே கற்கலாம்.

  • தேதி: மார்ச் 14, 2026 (சனிக்கிழமை)
  • இடம்: உங்கள் வீட்டில் இருந்தே (Online Workshop)
  • கட்டணம்: ₹1,200/-
  • தொடர்புக்கு: 9080609783, 9360221280
46
இந்த பயிற்சியில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
Image Credit : Asianet News

இந்த பயிற்சியில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

தயாரிப்பு முறை: தரமானRaw Materials-களை தேர்ந்தெடுப்பது முதல் பேக்கிங் வரை.

FSSAI உரிமம்: உணவுத் தொழிலுக்கான அரசு அங்கீகாரம் பெறுவது எப்படி?

விற்பனை வாய்ப்பு: உள்ளூர் சந்தை முதல் ஏற்றுமதி வரை உள்ள வாய்ப்புகள்.

அரசு மானியம்: தொழில் தொடங்கத் தேவையான கடன் மற்றும் மானியத் திட்டங்கள்.

இந்தப் பயிற்சிகள் வெறும் வகுப்பு மட்டுமல்ல, உங்கள் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான முதல் படி. முறையான திட்டமிடலுடன் இறங்கினால் மாதம் ரூ.50,000 என்பது ஆரம்பக்கட்ட லாபம் தான்!

56
உங்கள் வெற்றிக் கதை இன்று தொடங்கட்டும்!
Image Credit : Asianet News

உங்கள் வெற்றிக் கதை இன்று தொடங்கட்டும்!

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற பொன்மொழிக்கு ஏற்ப, ஒரு சிறிய முதலீடும் முறையான பயிற்சியும் இருந்தால் எவரும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தச் சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி வணிகமே சாட்சி. இன்றைய ஆரோக்கியம் சார்ந்த சந்தையில் (Health Food Market), தரம் மற்றும் சுவையை நீங்கள் சரியாகக் கொடுத்தால், மாதம் ரூ.50,000 என்பது வெறும் ஆரம்பம்தான். 

66
 முதலாளியாகவும் உருவெடுங்கள் மக்களே
Image Credit : Asianet News

முதலாளியாகவும் உருவெடுங்கள் மக்களே

அரசு வழங்கும் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வெறும் நுகர்வோராக (Consumer) இல்லாமல், ஒரு வெற்றிகரமான உற்பத்தியாளராகவும் (Producer), முதலாளியாகவும் உருவெடுங்கள். மார்ச் 14 அன்று நீங்கள் எடுக்கும் இந்த ஒரு நாள் முடிவு, உங்கள் குடும்பத்தின் பொருளாதார எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடும். தயக்கம் தடையல்ல, அதுவே உங்கள் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு! இப்போதே முன் பதிவு செய்து உங்கள் தொழில் கனவை நனவாக்குங்கள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate: இனி பாதியாக குறைய போகிறதா தங்க நகை விலை.?! தங்கம் மார்க்கெட்டை புரட்டிப்போடும் ஈரான் யுத்தம்.!
Recommended image2
காலியாக உள்ள ப்ளாட்டில் பணம் சம்பாதிக்கலாம்! இதை செய்தால் 100% வருமானம் கிடைக்கும்!
Recommended image3
இனி Tea Break கிடையாது.! டீ, காபி விலையேற்றத்தால் தள்ளாடும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை!
Related Stories
Recommended image1
காலியாக உள்ள ப்ளாட்டில் பணம் சம்பாதிக்கலாம்! இதை செய்தால் 100% வருமானம் கிடைக்கும்!
Recommended image2
குறைந்த வட்டி, அதிக லாபம்.! 2026-ல் தமிழ்நாட்டில் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் தரும் 5 சிறந்த வங்கிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved