MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!

உங்க பால்கனிய ஒரு குட்டி கார்டனா மாத்த ஆசையா? கிச்சன்ல வீணா தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை வெச்சு சூப்பரான தொங்கு செடிகளை வளர்க்கலாம். மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் மாதிரி 5 செடிகளை செலவே இல்லாம வளர்த்து, உங்க பால்கனிக்கு ஒரு மாடர்ன் லுக் கொடுங்க.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 14 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Coconut Shell Gardening Ideas
Image Credit : Asianet News

Coconut Shell Gardening Ideas

உங்க பால்கனி இல்லனா சின்ன இடத்த ஒரு அழகான மினி கார்டனா மாத்தணும்னு நெனச்சா, தேங்காய் ஓடு ஒரு சூப்பரான, காசே இல்லாத ஆப்ஷன். நாம கிச்சன்ல வேஸ்ட்னு தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை, கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சு அழகான தொங்கும் செடித் தொட்டியா மாத்தலாம். இதுல சின்ன செடிகள் ஈஸியா வளரும், பால்கனிக்கும் ஒரு நேச்சுரல், டிரெண்டி லுக் கிடைக்கும். முக்கியமா, தேங்காய் ஓட்டுல தண்ணி தேங்காது, அதனால செடியோட வேர்கள் பாதுகாப்பா இருக்கும். அப்படி தேங்காய் ஓட்டுல வளர்க்கக்கூடிய 5 செடிகளைப் பத்திப் பார்க்கலாம்.
26
மணி பிளான்ட்
Image Credit : chat GPT

மணி பிளான்ட்

மணி பிளான்ட் ரொம்ப ஈஸியா வளர்க்கக்கூடிய ஒரு பிரபலமான தொங்கும் செடி. குறைஞ்ச பராமரிப்புலயே வேகமா வளரும், தேங்காய் ஓட்டுல பார்க்க ரொம்ப அழகா இருக்கும். இதோட கொடி கீழ தொங்குறதால, பால்கனிக்கு ஒரு பசுமையான, ஃப்ரெஷ் லுக் கிடைக்கும். இதுக்கு மிதமான வெயிலும், குறைவான தண்ணீரும் போதும்.

Related Articles

Related image1
மீன் குழம்பை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
Related image2
சாதத்திற்கு அட்டகாசமான கேரளா தேங்காய் மீன் குழம்பு! வெறும் 7 பொருட்களில் தயார்!
36
ஸ்பைடர் பிளான்ட்
Image Credit : chat GPT

ஸ்பைடர் பிளான்ட்

ஸ்பைடர் பிளான்ட் அதோட நீளமான, மெல்லிய இலைகளாலயும், தொங்குற கிளைகளாலயும் ஒரு பெர்ஃபெக்ட் ஹேங்கிங் பிளான்ட்னு சொல்லலாம். தேங்காய் ஓட்டுல இதை வைக்கும்போது இன்னும் அழகா தெரியும். இந்த செடி காற்றை சுத்தப்படுத்தவும் உதவுது.

46
போத்தோஸ்
Image Credit : chat GPT

போத்தோஸ்

போத்தோஸ் செடி பாக்க மணி பிளான்ட் மாதிரியே இருந்தாலும், இதோட இலைகளோட டிசைன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இதை தேங்காய் ஓட்டுல வெச்சு பால்கனி கிரில்ல இல்லனா கொக்கியில மாட்டிவிடலாம். இந்த செடி வேகமா பரவி, குறைஞ்ச வெளிச்சத்துலயும் நல்லா வளரும்.

56
இங்கிலீஷ் ஐவி
Image Credit : chat GPT

இங்கிலீஷ் ஐவி

இங்கிலீஷ் ஐவி ஒரு கிளாசிக் தொங்கும் செடி. இதோட கொடிகள் கீழ அழகா தொங்கி, பாக்க ஒரு நேச்சுரல் செடி மாதிரி இருக்கும். இது உங்க பால்கனிக்கு ஒரு கார்டன் லுக்கைக் கொடுக்கும்.

66
போர்டுலக்கா
Image Credit : chat GPT

போர்டுலக்கா

உங்களுக்கு பூ பூக்குற தொங்கும் செடி வேணும்னா, போர்டுலக்கா ஒரு நல்ல சாய்ஸ். இதோட கலர் கலரான பூக்கள் பால்கனியை ரொம்ப அழகா காட்டும். தேங்காய் ஓட்டுல இதோட வேர்கள் ஈஸியா பிடிச்சுக்கும், வெயில்ல நல்லா வளரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Induction Cooker: இன்டக்‌ஷன் குக்கர் பயன்படுத்தும் போது இந்த 7 விஷயங்களை மறக்காதீங்க!
Recommended image2
சாதத்திற்கு அட்டகாசமான கேரளா தேங்காய் மீன் குழம்பு! வெறும் 7 பொருட்களில் தயார்!
Recommended image3
Induction Cooktop: கேஸ் தட்டுப்பாடா? அவசரப்பட்டு இன்டக்‌ஷன் வாங்காதீங்க! இந்த 5 விஷயத்தை செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
மீன் குழம்பை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
Recommended image2
சாதத்திற்கு அட்டகாசமான கேரளா தேங்காய் மீன் குழம்பு! வெறும் 7 பொருட்களில் தயார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved