- Home
- Cinema
- விஜய் பற்றி கேட்டதும் நோ கமெண்ட்ஸ்! சைலண்டாக எஸ்கேப் ஆன த்ரிஷா - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ!
விஜய் பற்றி கேட்டதும் நோ கமெண்ட்ஸ்! சைலண்டாக எஸ்கேப் ஆன த்ரிஷா - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ!
சென்னை விமான நிலையத்தில் விஜய் பற்றிய கேள்விக்கு நடிகை த்ரிஷா அளித்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் பெயரை கேட்டதும் மௌனமாக வெளியேறியது ஏன்? என்று பார்க்கலாம்.

1. த்ரிஷாவை துரத்திய செய்தியாளர்கள்
மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த த்ரிஷாவை பார்த்த செய்தியாளர்கள் அவரிடம் விஜய் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கினர். மேலும், த்ரிஷாவின் லேட்டஸ்ட் படங்கள் மற்றும் அரசியல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது எதற்கும் பதிலளிக்கவில்லை.
2. விஜய் பற்றிய கேள்வி - த்ரிஷாவின் ரியாக்ஷன்
திடீரென செய்தியாளர் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் வேகமாக நடையை கட்டினார். அதோடு அவரது முக பாவனையும் மாறியது.
3. வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ தற்போது எக்ஸ் (Twitter) மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "ஏன் விஜய் பற்றி கேட்டதும் த்ரிஷா அமைதியாகிவிட்டார்?" என நெட்டிசன்கள் பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். 'லியோ' படத்திற்குப் பிறகு இவர்களைச் சுற்றிப் பல வதந்திகள் பரவி வரும் நிலையில், த்ரிஷாவின் இந்த 'சைலண்ட்' ரியாக்ஷன் மேலும் பேசுபொருளாகியுள்ளது.
4 திருமணத்தில் ஒன்றாக வலம் வந்த விஜய் – த்ரிஷா
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த நிலையில், தனது கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அவருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிட்டு தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
5 ஒரே காஸ்டியூம் ஒரே கார்
சென்னையில் நடைபெற்ற AGS குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடை அணிந்து சென்று அனைவரையும் வியப்படையை செய்தனர். ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட விஜயை விமர்சித்து வந்தனர். விஜய்க்கு சப்போர்ட் செய்தவர்கள் கூட இந்த செயலை பார்த்துவிட்டு அனைவரும் தனது வெறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.