MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

Jana Nayagan Release Date : எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : May 25 2026, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jana Nayagan Release Date
Image Credit : KVN Productions

Jana Nayagan Release Date

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ‘ஜனநாயகன்’. நடிகர் விஜய் அரசியலுக்கு முழுமையாக களம் இறங்கிய பிறகு அவர் நடித்த இறுதி திரைப்படம் என்ற அடையாளமே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இப்படத்தை இயக்கியிருப்பது தனது வித்தியாசமான திரைக்கதைகளாலும் சமூக கருத்துக்களைக் கொண்ட வணிக திரைப்படங்களாலும் கவனம் பெற்ற இயக்குநர் எச்.வினோத் என்பதும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்கள் மூலம் தனித்துவமான பாணியை உருவாக்கிய வினோத், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்திருப்பதால் ‘ஜனநாயகன்’ குறித்த பேச்சு ஆரம்ப கட்டத்திலிருந்தே அதிகரித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விஜய்யின் ஜனநாயகன்
Image Credit : Facebook

விஜய்யின் ஜனநாயகன்

அரசியல் பின்னணியுடன் ஆக்ஷன் மற்றும் சமூக கருத்துகளை இணைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமாக படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

35
சென்சார் பிரச்சனை
Image Credit : X

சென்சார் பிரச்சனை

பிரம்மாண்ட தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதலில் இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு தயாராகினர். ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானதாக கூறப்பட்டது. அரசியல் சார்ந்த சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின.

இதனால் படக்குழு சட்டரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பின்னர் ரீவைசிங் கமிட்டி மூலம் படத்திற்கு சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கிடையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல்கள் தயாரிப்பு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே திரைப்படம் சட்டவிரோத தளங்களில் பரவியதாக கூறப்பட்டதால், தமிழ் திரையுலகில் இது பெரும் சர்ச்சையாக மாறியது.

45
தேர்தலில் வென்ற விஜய்
Image Credit : X

தேர்தலில் வென்ற விஜய்

அதே நேரத்தில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் சூழலும் ‘ஜனநாயகன்’ வெளியீட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பேசப்பட்டது. அரசியல் பின்னணி கொண்ட திரைப்படம் என்பதால், தேர்தல் காலத்தில் வெளியிடுவது கூடுதல் விவாதங்களை உருவாக்கும் என்ற காரணத்தால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு தற்போது ரசிகர்கள் மீண்டும் ‘ஜனநாயகன்’ அப்டேட்டை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக “விஜய்யின் கடைசி படம் எப்போது வெளியாகும்?” என்ற கேள்வி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், “இன்னும் சில வாரங்களில் படம் வெளியாகும்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

55
ஜனநாயகன் எப்போ ரிலீஸ்?
Image Credit : KVN Productions

ஜனநாயகன் எப்போ ரிலீஸ்?

அதில் முக்கியமாக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் ‘ஜனநாயகன்’ ஜூன் மாத வெளியீடாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால், அதையொட்டி ஜூன் 19ந் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், படத்திற்கு ‘U/A 16+’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் மீண்டும் தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதோடு, அவர் அரசியல் வாழ்க்கையில் புதிய கட்டத்தை எட்டிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும், வசூல் ரீதியாக புதிய சாதனைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அனைவரது கவனமும் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பை நோக்கி திரும்பியுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Related Stories
Recommended image1
'ஜனநாயகன்' லீக் - நஷ்டத்தை ஈடுகட்ட தளபதி விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!
Recommended image2
ஜனநாயகன் படத்தை லீக் பண்ணியது இவங்கதானா?.. 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved