MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜனநாயகன் படத்தை லீக் பண்ணியது இவங்கதானா?.. 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்

ஜனநாயகன் படத்தை லீக் பண்ணியது இவங்கதானா?.. 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்ததால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 13 2026, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : KVN Productions, Ram Muthuram Cinemas

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் முழுவதும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இச்சம்பவம் படக்குழுவினர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சட்ட விரோதமாக இணையத்தில் படம் வெளியாகி உள்ளதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

26
Image Credit : KVN Productions

இந்நிலையில் ஜனநாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, பல டிஜிட்டல் தளங்களில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத இணைய கசிவு தொடர்பான புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் குற்ற எண் 47/2026 பாரதிய நியாயா சன்ஹிதா (பி. என். எஸ்) தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் மற்றும் சினிமாடோகிராஃப் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

Related Articles

Related image1
தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்
Related image2
LIK Day 3 Box Office : டிராப் ஆனதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்? 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
36
Image Credit : ANI

புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீறப்பட்ட URL-களை அடையாளம் கண்டு தடுப்பது, டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் தொடர் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் விசாரணை மூலம் கண்டுபிடிப்பது போன்ற வழக்கின் பல்வேறு அம்சங்களைக் கையாள சைபர் குற்றப் பிரிவில் பல சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

46
Image Credit : our own

திருட்டு உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க இணையவெளியில் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, சுமார் 300 மீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பபட்டுள்ளது. மேலும் அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

56
Image Credit : Asianet News

பொதுமக்களுக்கு அறிவுரை

* ஜனநாயகன் அல்லது பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களின் திருட்டு பிரதிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு கைது செய்ய பட கூடிய குற்றமாகும். மேலும் தகுந்த சட்டங்களின் கீழ் தண்டனைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும்.

* சமூக ஊடகங்கள், செய்தியிடல் தளங்கள் அல்லது வலைத்தளங்கள் மூலம் திருட்டு உள்ளடக்கத்தை தெரிந்தே பரப்பும் அல்லது ஊக்குவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

66
Image Credit : our own

புகார் அளிக்க

நீங்கள் இதேபோன்ற இணைப்புகள் பார்க்க நேர்ந்தாலும் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் www.cybercrime.gov.in அல்லது என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
ஜன நாயகன்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
Recommended image2
LIK Day 3 Box Office : டிராப் ஆனதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்? 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image3
முத்துவேல் மீது சக்திவேலுக்கு வந்த டவுட்... ராஜியிடம் பொய் சொன்ன கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்
Recommended image2
LIK Day 3 Box Office : டிராப் ஆனதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்? 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved