MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்

Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்

Trisha Attend Independence Day Celebration : சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 15 2026, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
Trisha Salute to CM Joseph Vijay
Image Credit : X

Trisha Salute to CM Joseph Vijay

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைநகர் முதல் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்து வரவேற்றார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழா என்பதால், நிகழ்ச்சிக்கு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
விழாவில் த்ரிஷா வருகை
Image Credit : X

விழாவில் த்ரிஷா வருகை

இந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டார். அவர் தனது தாயாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழா மேடையில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா அருகில் த்ரிஷா அமர்ந்திருந்தார். மேடைக்கு வந்த த்ரிஷாவை சிரித்த முகத்தோடு வரவேற்றார் ஷோபா.

விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் த்ரிஷா பங்கேற்றிருந்தார். இதனால் தற்போது நடைபெற்ற சுதந்திர தின விழாவில் த்ரிஷாவின் வருகையும் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Related image1
Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!
Related image2
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?
Recommended image2
Vishwanath And Sons Day 1 Box Office : முதல் நாளே கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்..!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?
Related Stories
Recommended image1
Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!
Recommended image2
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved