MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்

Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்

Jailer Movie Fame Rithvik : கோயம்புத்தூரைச் சேர்ந்த 'ரித்து ராக்ஸ்' ரித்விக் ஜோதி ராஜ், குழந்தை நட்சத்திரமாவும் கன்டென்ட் கிரியேட்டராகவும் கலக்கிட்டு இருக்கார். இதுபோக அவர் வேற என்னலாம் பண்றார்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 21 2026, 05:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ritu Rocks Rithvik
Image Credit : X

Ritu Rocks Rithvik

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரித்விக் ஜோதி ராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் அவருக்குப் பேரனாக நடித்து பிரபலமான ரித்விக், தற்போது உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பம், கோடிங், ரோபோடிக்ஸ் எனப் பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வரும் இவர், நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ஒரு தொழில் முயற்சியையும் தொடங்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரஜினியின் ரீல் பேரன் ரித்விக்!
Image Credit : Instagram

ரஜினியின் ரீல் பேரன் ரித்விக்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ரித்விக் ஜோதி ராஜ், சமூக வலைதளங்களில் 'ரித்து ராக்ஸ் ரித்விக்' என்ற பெயரில் பிரபலமானவர். ஆரம்பத்தில் விதவிதமான வீடியோக்களை உருவாக்கி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், தனது இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையான பேச்சாலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த வரவேற்பு இவருக்குச் சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 'O2', 'சர்தார்', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் பேரனாக நடித்தது ரித்விக்கின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

35
ரித்விக்கின் பிசினஸ் ஐடியா!
Image Credit : Instagram

ரித்விக்கின் பிசினஸ் ஐடியா!

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை ரித்விக் கைவிடவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில், நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய தனது பிசினஸ் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒருநாள் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கமாகப் பேசிக்கொண்டிருப்பதைத் தாண்டி புதிதாக ஏதாவது செய்யலாம் என்ற யோசனை ரித்விக்கிற்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அவரது நண்பர்கள் சிலருக்கு ஏற்கெனவே கோடிங் தெரிந்திருந்ததால், அனைவரும் ஒன்றிணைந்து இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்த முயற்சி பின்னர் சிறிய அளவிலான பிசினஸாக வளர்ந்துள்ளது.

45
ஐடி கம்பெனி ஓனரான ரித்விக்
Image Credit : Instagram

ஐடி கம்பெனி ஓனரான ரித்விக்

ரித்விக் மற்றும் அவரது நண்பர்கள் உருவாக்கிய இணையதளம் மூலம் சில பொருட்களை விற்பனை செய்வதுடன், பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் வழங்கி வருகின்றனர். இருப்பினும், தங்களது இணையதளத்திற்கு தற்போதைக்கு அதிகமான பார்வையாளர்கள் வருவதில்லை என்பதையும் ரித்விக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்குப் பைதான் புரோகிராமிங் தெரியும் என்றும், ரோபோடிக்ஸ் துறையில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரோபோக்களை உருவாக்குவது தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வருவதாகப் பகிர்ந்துள்ளார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், எதிர்காலத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதிலும் ரித்விக் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

55
ஐந்து பேர் கொண்ட குட்டி டீம்
Image Credit : Instagram

ஐந்து பேர் கொண்ட குட்டி டீம்

ரித்விக் தொடங்கியுள்ள இந்த முயற்சியில் அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தங்களுக்குத் தெரிந்த திறமைகளைப் பயன்படுத்தி இணையதளத்தை மேம்படுத்துவதிலும் தொழிலை வளர்ப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வப் பதிவு, முதலீடு மற்றும் வருமானம் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இதனை நண்பர்களுடன் இணைந்து ரித்விக் முன்னெடுத்து வரும் சிறிய தொழில் முயற்சியாகவே பார்க்க முடிகிறது.

சமூக வலைதள வீடியோக்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து, ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற ரித்விக், தற்போது தொழில்நுட்ப உலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சிறுவயதிலேயே நடிப்பு, கோடிங், ரோபோடிக்ஸ், பிசினஸ் எனப் பல துறைகளில் ஆர்வம் காட்டி வரும் ரித்விக்கின் இந்தப் புதிய முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Recommended image2
TTF Vasan : டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு? வீக் எண்டில் விஜய் சேதுபதி வைக்கப்போகும் செக்..!
Recommended image3
Karthik Sabesh : தேவாவின் தம்பி மகன்... கோலிவுட்டின் நண்பேன்டா! யார் இந்த கார்த்திக் சபேஷ்? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?
Related Stories
Recommended image1
Jailer 2 Memes : ஜெயிலர் 2 ட்ரெண்டிங் மீம்ஸ்..ரஜினி முதல் நெல்சனின் காமெடி வரை இணையத்தில் தெறிக்கும் கலாய்!
Recommended image2
Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved