MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?

Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?

Magudam Box Office Collection Day 1 : விஷால் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மகுடம் திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 15 2026, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Magudam Box Office
Image Credit : X

Magudam Box Office

விஷால் முதல் முறையாக இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் மகுடம். இதில் அவர் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் லிங்கா என்ற கதாபாத்திரத்தில் விஷால் ஒரு சக்திவாய்ந்த கேங்ஸ்டராக வருகிறார். அவரது மகன் கிருபாகரன் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்கிறார். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக பணியாற்றும் கிருபா, மனைவி ஜமுனா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறார்.

ஒருபுறம் லிங்கா ஆடம்பரமான வாழ்க்கையில் இருக்க, மறுபுறம் கிருபா அன்றாட தேவைகளுக்கே போராடும் சூழலில் இருக்கிறார். கிருபாவுக்கு பண உதவி செய்யக்கூட பலரும் தயங்கும் அளவுக்கு அவரது பொருளாதார நிலை இருக்கிறது. ஆனால், அவரது மனைவி ஜமுனா கணவரின் கஷ்டங்களை புரிந்துகொண்டு துணையாக நிற்கிறார். கமர்ஷியல் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களையும் நினைவில் நிற்கும் வகையில் உருவாக்கியிருப்பது இயக்குநராக விஷாலின் நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகுடம் படத்தின் மைனஸ்
Image Credit : X

மகுடம் படத்தின் மைனஸ்

அதே நேரத்தில், படத்தின் நகைச்சுவைப் பகுதிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. விஷால் மற்றும் சித்ரா லட்சுமணன் இடம்பெறும் சில காட்சிகள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக திணிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன. ரசிகர்களிடம் விசில் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட சில மாஸ் காட்சிகளும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் சில இடங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக, ஒரு காட்சி முடிந்த பிறகு அடுத்த காட்சியுடன் அதன் தொடர்பு என்ன என்ற கேள்வி எழும் வகையில் சில பகுதிகள் அமைந்துள்ளன.

Related Articles

Related image1
Vishal : கோலிவுட்டில் அரசு தலையீடு... உங்களுக்கு எதுக்கு சினிமா துறை - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஷால்
Related image2
Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ
35
பின்னடைவை சந்தித்த மகுடம்
Image Credit : X

பின்னடைவை சந்தித்த மகுடம்

படத்தின் ஓட்டத்தில் இதுபோன்ற இடைவெளிகள் இருப்பது கதையின் வேகத்தை பாதிக்கிறது. இசையிலும் பெரிய அளவிலான தாக்கம் இல்லாதது படத்திற்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் மாஸ் தன்மையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை சராசரி அளவிலேயே இருப்பதாக தோன்றுகிறது. இரட்டை வேடங்களில் விஷால் நடித்திருந்தாலும், கிருபாகரனைவிட லிங்கா கதாபாத்திரம்தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது.

45
மகுடம் எப்படி இருக்கு?
Image Credit : X

மகுடம் எப்படி இருக்கு?

ஒரு முழுமையான கமர்ஷியல் படத்திற்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வர விஷால் முயற்சி செய்திருக்கிறார். இரட்டை வேடம், இரண்டு கதாநாயகிகள், குடும்ப சென்டிமென்ட், கேங்ஸ்டர் பின்னணி, மாஸ் காட்சிகள் என ரசிகர்களை கவரக்கூடிய பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவை அனைத்தும் ஒன்றாக இணைந்தபோதும் எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்க அனுபவத்தை உருவாக்கவில்லை என்பதுதான் படத்தின் முக்கியமான குறையாக தெரிகிறது.

55
மகுடம் படத்தின் வசூல்
Image Credit : X

மகுடம் படத்தின் வசூல்

இப்படம் முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்ற மகுடம் திரைப்படம் வசூலில் செம அடி வாங்கி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் வெறும் ரூ.68 லட்சம் மட்டுமே இந்தியாவில் வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் இதன் தமிழ் வெர்ஷன் 38 லட்சமும், தெலுங்கு வெர்ஷன் 20 லட்சமும் வசூலித்துள்ளதாம். கர்நாடகாவில் ரூ.7 லட்சமும், கேரளாவில் ரூ.2 லட்சமும் இதர மாநிலங்களில் ரூ.1 லட்சமும் வசூல் செய்துள்ளது. முதல் நாள் வசூலில் சோபிக்காத மகுடம், இந்த வீக் எண்ட் சோபிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஷால் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwanath And Sons Day 1 Box Office : முதல் நாளே கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்..!
Recommended image2
Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?
Recommended image3
சுதந்திர தினத்தில் பார்க்க வேண்டிய 9 சூப்பர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Vishal : கோலிவுட்டில் அரசு தலையீடு... உங்களுக்கு எதுக்கு சினிமா துறை - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஷால்
Recommended image2
Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved