- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் முடிவில் இருந்த விஜயா அதை சிந்தாமணி உடன் சேர்ந்து செய்தும் காட்டியுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Siragadikka aasai serial Twist
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்க்கு எப்படியாவது டைவர்ஸ் வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் விஜயா. அவ்வளவு எளிதாக டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என ரோகினியும் மறுபுறம் சவால் விட்ட வண்ணம் உள்ளார். மனோஜ் - ரோகினியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் தற்போது தன் மகனுக்கு பணக்கார வீட்டு பெண்ணாக பார்த்து மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் விஜயா. இதனை சிந்தாமணியிடமும் அவர் சொல்லி இருக்கிறார். இருவரும் சேர்ந்து மனோஜ்க்கு பெண் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதிலும் ஒரு டுவிஸ்ட் நடந்துள்ளது.
மனோஜுக்கு வரன் தேடும் விஜயா
அது என்னவென்றால் ரவியை காதலிப்பதாக சொல்லி ஸ்ருதியின் வாழ்க்கையில் விளையாடி வரும் நீத்துவை தன் மகன் மனோஜ்க்கு இரண்டாம் தரமாக கட்டி வைக்க ஆசைப்படுகிறார் விஜயா. இதற்காக சிந்தாமணியுடன் சேர்ந்து நீத்தூவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க சிந்தாமணி விஜயாவிடம் தன் பரம எதிரியான மீனாவை பற்றி கொளுத்தி போட்டு வருவதை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் மனோஜ்க்கு பணக்கார வீட்டு பெண்ணாக பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட விஜயாவிடம் சிந்தாமணி சொன்ன ஒரே கண்டிஷன், பணக்கார வீட்டுப் பெண்ணை பார்க்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டாவது மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் தெரு தெருவாக சென்று பூ விற்பவர் என்று தெரிந்தால் உங்கள் மகனுக்கு பணக்கார வீட்டு வரன் கிடைக்காது என கொளுத்தி போட்டுள்ளார்.
மீனாவை துரத்த பிளான்
மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ள விஜயா என்ன செய்யலாம் என சிந்தாமணி இடம் ஆலோசனை கேட்க அவரோ ஒரு பிளானை சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால் தற்போது விஜயாவின் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகளாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மனோஜ் ரோகிணியுடன் சண்டை போட்டு விவாகரத்துக்கு தயாராகி இருக்கிறார். அதேபோல் விஜயாவின் இளைய மகன் ரவி தன் மனைவி ஸ்ருதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனை காரணம் காட்டி உங்கள் வீட்டில் ஒரு பூஜை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்வதாக சிந்தாமணி கூறியிருக்கிறார்.
வீட்டில் நடக்கும் பூஜை
அந்தப் பூஜையில் தான் மிகப்பெரிய ட்விஸ்ட்டே காத்திருக்கிறது. வீட்டில் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மீனா செய்து முடிக்க, அங்கே ஒரு பெண் பூஜை செய்ய வருகிறார். பூஜையின் போது சாமி வந்தது போல் ஆடி அந்த பெண் விஜயாவிடம் உன் குடும்பத்தையே ஆட்டிப்படைப்பது போல் பெரிய கெடுதல் நடக்கப் போகிறது என சொல்கிறார். அது மட்டும் இன்றி இந்த வீட்டிற்கு நல்ல நேரம் வர வேண்டும் என்றால் உன்னுடைய இரண்டாவது மருமகள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. அதையும் மீறி அவர் இந்த வீட்டில் இருந்தால் உன்னுடைய புருஷன் உயிருக்கு ஆபத்து என அந்த பெண் சாமியார் சொன்னதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
வீட்டை விட்டு செல்கிறாரா மீனா?
தன்னால் தன்னுடைய மாமாவிற்கு ஆபத்து வரப்போவதாக அந்தப் பெண் சொன்னதை கேட்டதும் மீனா கண்ணீர் சிந்துகிறார். ஆனால் முத்துவுக்கு அந்த பெண் சாமியார் மீது சற்று சந்தேகம் வருகிறது. இருப்பினும் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் சொல்லி இருப்பதால் மீனாவே இந்த வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இந்த ப்ரோமோவின் மூலம் விஜயாவின் பிளான் கிட்டத்தட்ட சக்சஸ் ஆகி இருப்பது போல் தெரிகிறது. ஒருவேளை முத்துவும் மீனாவும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்கள் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி விஜயா வேறு என்னென்ன வில்லங்கத்தில் சிக்க போகிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

