MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ள விஜயா, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 21 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வத்தை ஜாமினில் வெளியே எடுத்த முத்து, அருணிடம் பேசி கேஸை வாபஸ் வாங்க வைத்ததோடு, அவர் கேட்ட இழப்பீட்டு தொகையான 5 லட்சத்தையும் ஒரு மாதத்தில் கொடுப்பதாக சொல்லி இருந்தார். செல்வம் தன்னால் காசு புரட்ட முடியவில்லை என சொன்னதும், களத்தில் இறங்கிய முத்து, தன்னுடைய காரை சத்யா வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து, பணத்தை வாங்கி செல்வத்திடம் கொடுக்க, அவர் அருணிடம் அந்த பணத்தை கொடுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பொய் சொன்ன சீதா
Image Credit : jiohotstar

பொய் சொன்ன சீதா

பணத்தை வாங்கிய அருணிடம் இந்த பணம் என்னோட மாமா காரை அடமானம் வச்சு தான் கொடுத்திருக்காரு, இந்த காசு நமக்கு தேவையா என கேட்க, அவரை அடித்து கொடுமைப்படுத்திய அருண், என்னை எதுத்து எதுவும் நீ பேசக் கூடாது என மிரட்டுகிறார். இதையடுத்து தன்னுடைய அம்மா வீட்டுக்கு வரும் சீதாவிடம், அருண் உன்னிடம் எதுவும் பிரச்சனை பண்ணுகிறாரா என மீனா கேட்க, அதெல்லாம் இல்லை என பொய் சொல்லிவிடுகிறார் சீதா. தான் அருண் கொடுமைப்படுத்தும் விஷயத்தை சொன்னால், மீண்டும் பிரச்சனை வரும் என்பதால் அதை மூடி மறைத்துவிடுகிறார் சீதா.

35
காரை அடமானம் வைத்ததை வீட்டில் சொன்ன முத்து
Image Credit : jiohotstar

காரை அடமானம் வைத்ததை வீட்டில் சொன்ன முத்து

இதையடுத்து முத்துவும், மீனாவும் வீட்டுக்கு சென்று, செல்வத்திற்கு காசு கொடுத்த விஷயத்தை சொல்கிறார். அதற்காக காரை அடமானம் வைத்த விஷயத்தையும் சொல்லிவிடுகிறார் முத்து. இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜயாவும், மனோஜும், முத்துவை கேலி செய்கிறார்கள். அதற்கு மீனா பதிலடி கொடுக்கிறார். இதன் பின்னர் விஜயா கிளம்பி பார்வதி வீட்டுக்கு செல்கிறார். அவார்டு வாங்குவதற்காக வெளியூர் சென்றிருந்த பார்வதி, அங்கிருந்து திரும்பி வந்திருந்த நிலையில், அவர் விஜயாவிடம் தனக்கு வழங்கப்பட்ட விருதை கொண்டுவந்து காட்டுகிறார்.

45
பார்வதியை பார்த்து பொறாமைப்படும் விஜயா
Image Credit : jiohotstar

பார்வதியை பார்த்து பொறாமைப்படும் விஜயா

அதுமட்டுமின்றி தனக்கு ஒரு வேலை கிடைத்திருக்கும் விஷயத்தையும் பார்வதி சொல்கிறார். தான் யூடியூப்பில் சிறுவர்களை கவரும் விதமாக கதை சொல்வதை பார்த்து இம்பிரஸ் ஆகி பள்ளி ஒன்றில் இருந்து என்னை அழைத்து, வாரத்திற்கு 7 கதைகள் கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். இதற்காக மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என சொன்னதும், அதைக்கேட்டு விஜயா வாயடைத்துப் போகிறார். கதை சொல்றதுக்கா இவ்வளவு காசு தருவாங்க என கேட்கிறார் விஜயா. அந்த நேரம் பார்த்து சிந்தாமணி அங்கு வருகிறார்.

55
நீத்துவை பெண் கேட்க செல்லும் விஜயா
Image Credit : jiohotstar

நீத்துவை பெண் கேட்க செல்லும் விஜயா

இதையடுத்து சிந்தாமணியை அழைத்துக் கொண்டு நேராக நீத்து வீட்டிற்கு செல்கிறார் விஜயா. மனோஜுக்கு டைவர்ஸ் வாங்க இருப்பதால் அவருக்கு நீத்துவை இரண்டாவது திருமணம் செய்துவைக்கலாம் என திட்டமிட்டுள்ள விஜயா, சிந்தாமணியை வைத்து அது தொடர்பாக பேச சென்றிருக்கிறார். ஆனால் நீத்துவோ ரவியை தான் தனக்கு பொண்ணு கேட்க வந்திருக்கிறார்கள் போல என தப்பு கணக்கு போடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? நீத்து திருமணத்துக்கு சம்மதிப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
TV Serials : அதிக நாட்கள் ஓடிய டாப் 10 தமிழ் சீரியல்கள்! 8 வருஷம் ஓடுன அந்த சீரியல் பத்தி தெரியுமா?
Recommended image3
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Related Stories
Recommended image1
காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Recommended image2
ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved