MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவை அடிச்சு டார்ச்சர் பண்ணி இருக்கிறார் அருண். அதை அக்காவிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார் சீதா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் அருணின் அம்மா மீது செல்வத்தின் கார் மோதியதில் அவர் பலியானார். இதையடுத்து முத்து சொல்லி தான் செல்வம் இவ்வாறு செய்ததாக கூறி முத்துவிடம் சண்டைக்கு போன அருண், அவரை இறுதி அஞ்சலியும் செலுத்தவிடவில்லை. செல்வத்தை ஜாமினில் எடுத்த முத்து, இந்த வழக்கில் இருந்து அவனை வெளியே கொண்டு வர அருணிடம் வக்கீல்கள் முன்னிலையில் சமாதானம் பேசினார். அப்போது ஐந்து லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்குள் கொடுப்பதாக முத்து ஒப்புதல் அளித்ததை அடுத்து அருண் வழக்கை வாபஸ் வாங்கினார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
முத்துவிடம் உதவி கேட்ட செல்வம்
Image Credit : jiohotstar

முத்துவிடம் உதவி கேட்ட செல்வம்

அருண் கேட்ட பணத்தை ரெடி பண்ணுவதற்காக ஊருக்கு சென்றிருந்த செல்வம், மீண்டும் சென்னைக்கு வந்த உடனே கார் ஷெட்டில் முத்துவை சந்தித்து பேச வருகிறார். அங்கு வந்த செல்வத்திடம் பணம் ரெடி பண்ணிட்டியா என கேட்க, அவரோ தன்னால் 1 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே புரட்ட முடிந்ததாக சொல்ல, மீதி பணத்துக்கு என்ன பண்ண போற என முத்து கேட்கிறார். உன்னால் எதாச்சும் உதவ முடியுமாடா என செல்வம் முத்துவிடம் கேட்க, அவரோ, நானே இப்ப தான் டா கார் டியூ கட்டி முடிச்சேன் என்கிட்ட சுத்தமா காசு இல்லை என கூறுகிறார். இதையடுத்து மீனாவிடம் பேசுவதாக சொல்கிறார் முத்து.

Related Articles

Related image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
35
காரை அடமானம் வைக்கும் முத்து
Image Credit : jiohotstar

காரை அடமானம் வைக்கும் முத்து

பின்னர் வீட்டுக்கு வந்து முத்து மீனாவிடம், செல்வம் காசு கிடைக்காமல் கஷ்டப்படுவதைப் பற்றி சொல்ல, உடனே மீனா என்ன செய்யப்போறீங்க என கேட்கிறார். அதற்கு முத்து, உன்னிடம் எதாச்சும் பணம் இருக்குதா என கேட்கிறார். உடனே மீனா, நான் 50 ஆயிரத்துக்கு சீட்டு ஒன்னு போட்டிருக்கேன், அதை எடுத்துத் தருகிறேன் என சொல்கிறார். அதன்பின் முத்துவும் நானும் என்னுடைய காரை அடமானம் வைத்து செல்வத்துக்கு பணம் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். சத்யாவின் ஆபிஸில் தான் இதனை அடமானம் வைத்து காசு வாங்க உள்ளேன் என சொல்ல, மீனாவும் அதற்கு ஓகே சொல்கிறார்.

45
சத்யாவின் கம்பெனியில் கடன் வாங்கிய முத்து
Image Credit : jiohotstar

சத்யாவின் கம்பெனியில் கடன் வாங்கிய முத்து

பின்னர் சத்யாவின் கம்பெனிக்கு செல்கிறார் முத்து. அப்போது சத்யா, ரேகாவோடு பர்சனல் விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் முத்துவிடம் வந்து பேசும் சத்யா, முத்துவின் கார் சாவியை வாங்கி ஓட்டிப் பார்த்து, கார் நல்ல கண்டிஷனில் தான் இருக்கிறது. இதற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் வரை தரலாம் என சொல்கிறார். முத்து தனக்கு 3 லட்சம் மட்டும் போதும் என சொல்ல, அதன்பின்னர் ரேகாவிடம் சென்று பேசும் சத்யா, தன்னுடைய மாமாவின் காருக்கு 3 லட்சம் கடன் வேண்டும் என சொன்னதும் ரேகாவும் உடனடியாக பணத்தை எடுத்து கொடுக்க சொல்கிறார். சத்யாவும் கொடுத்துவிடுகிறார்.

55
அருணிடம் அடிவாங்கிய சீதா
Image Credit : jiohotstar

அருணிடம் அடிவாங்கிய சீதா

இதையடுத்து இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் தன் இரு மகள்களையும் போன் போட்டு வீட்டுக்கு வர சொல்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்த மீனாவிடம் ஏன் மாப்ள காரை அடமானம் வச்சாரு என கேட்கிறார். அதேபோல் சீதாவையும் சத்தம் போடும் அவர், உன் புருஷனும் ரொம்ப கறாராக தான் நடந்து கொள்கிறார் என சொல்கிறார். பணத்தை வாங்கிய பின் அருண் என்ன சொன்னார் என மீனா சீதாவிடம் கேட்க, அவர் வீட்டில் நடந்ததை யோசித்துப் பார்க்கிறார். அப்போது முத்து காரை அடமானம் வைத்து பணத்தை கொடுத்திருக்கிறார் என சீதா அருணிடம் சொல்ல, அவரை கன்னத்திலேயே பளார் என அறைவிட்ட அருண், நான் சொல்றதை மட்டும் கேட்கணும், எதுவும் பேசக்கூடாது என சொல்லி சீதாவை டார்ச்சர் பண்ணி இருக்கிறார். இதை மீனாவிடம் சொல்லாமல் மூடி மறைத்துள்ளார் சீதா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!
Related Stories
Recommended image1
சிந்தாமணி வீட்டு மருமகன் ஆகப்போகும் மீனா தம்பி... கிரிஷை பார்க்க மறுக்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved