MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாக்கியத்தின் வீட்டுக்கு அவரின் மகள் தங்கமயிலை அழைத்து சென்ற மீனா, அவருக்கு உதவ முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 18 2026, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்கொலை செய்ய இருந்த தங்கமயிலை காப்பாற்றிய மீனா, அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்திருந்தார். இதைப்பார்த்து கடுப்பான செந்தில் மீனாவிடம் சண்டைபோட்டு விட்டு தன்னுடைய அம்மாவீட்டுக்கு சென்றார். அங்கு உண்மையை சொல்லாமல் சாப்பாடு சரியில்லை அதனால் இங்கு சாப்பிட வந்தேன் என்று சொல்லி செந்தில் சமாளிக்க, அவரை திட்டி அனுப்பிவிட்டார் பாண்டியன். இதையடுத்து மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார் செந்தில். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மீனாவிடம் உதவி கேட்ட தங்கமயில்
Image Credit : jiohotstar

மீனாவிடம் உதவி கேட்ட தங்கமயில்

தங்கமயிலை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்கு செல்கிறார் மீனா. அங்கு சென்ற உடனே பாக்கியம், தங்கமயிலை வீட்டுக்குள்ள சேர்க்கவே முடியாது என கூறுவதோடு, இவளுக்கெல்லாம் இங்க சப்பாடு ஆக்கிப்போட்டு தங்க வைக்குறதுக்கு எங்ககிட்ட வசதி இல்லை. அதனால இவ எங்கயோ போகட்டும்னு சொல்லி பாக்கியம் தங்கமயிலை திட்டுகிறார். அம்மா திட்டியதால் அழுதுகொண்டிருந்த தங்கமயிலை ரூமுக்கு அழைத்துச் செல்லும் மீனா, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து தற்கொலை முடிவை கைவிட்ட தங்கமயில், தனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடு என கேட்கிறார். மீனாவும் நான் கண்டிப்பா ஏற்பாடு பண்ணுறேன்னு சொல்கிறார்.

35
ராஜிக்கு ஃபீஸ் கட்டிய கதிர்
Image Credit : jiohotstar

ராஜிக்கு ஃபீஸ் கட்டிய கதிர்

மறுபுறம் கதிர், தன்னுடைய மனைவி ராஜியை அழைத்துச் சென்று கோச்சிங் கிளாஸில், பணம்கட்டி சேர்த்துவிடுகிறார். மொத்த காசையும் கட்டுகிறார் கதிர். அதைப்பார்த்து ஷாக் ஆன ராஜி, உனக்கு ஏது இவ்வளவு காசு, எப்படி கிடைச்சதுனு கேட்கிறார். அதற்கு கதிர், அதெல்லாம் உனக்கு எதுக்கு, நீ படிக்குற வேலையை மட்டும் பாரு என சொல்கிறார். கதிர் எப்படி இவ்வளவு பெரிய தொகையை ரெடி பண்ணினார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள்.

45
குமாருக்கு வந்த வரன்
Image Credit : jiohotstar

குமாருக்கு வந்த வரன்

இதையடுத்து ராஜியின் அம்மா வீட்டில், அவருடைய அம்மா, விருந்துக்கு போன இடத்தில் இப்படி பண்ணிட்டாங்களே என புலம்பிக் கொண்டிருக்கிறார். விருந்துக்கு போகாமலே இருந்திருக்கலாம் என சொல்லிக் கொண்டிருக்கையில், முத்துவேல் அங்கு வருகிறார். அவர் சக்திவேல், குமார் எல்லாரையும் வர வைத்து குமாருக்கு பொண்ணு பார்த்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். நாளைக்கே பொண்ணு வீட்டில் இருந்து வருகிறார்கள் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

55
மீண்டும் சேர்ந்த செந்தில் - மீனா
Image Credit : jiohotstar

மீண்டும் சேர்ந்த செந்தில் - மீனா

ஆனால் குமார் மட்டும் சோகமாகவே இருக்கிறார். அவர் அரசியை மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வேறு பெண்ணை பார்த்திருப்பதால், நிச்சயம் பிரச்சனை பண்ணுவார் போல தெரிகிறது. மறுபுறம் சண்டைபோட்டு சென்ற செந்திலிடம் ஒருவழியாக பேசி சமாதானப்படுத்துகிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Related Stories
Recommended image1
வீட்டை விட்டு துரத்திவிட்ட பாக்கியம்... உயிரைவிடத் துணிந்த தங்கமயில் - பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image2
தங்கமயிலால் கணவரை பிரியும் மீனா... கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved