இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் F 16 ஜெட் விமானத்தை பயன்படுத்த முடியாது ...ஏன் தெரியுமா ?
F -16 Jet: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு இஸ்லாமாபாத் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியது. இந்தியா இந்த தாக்குதலை S 400 சுதர்சன சக்ரா கொண்டு வெற்றிகராமாக முறியடித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.