MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?

கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?

இன்று நாம் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பல பொருட்கள் கச்சா எண்ணெய்யில் இருந்து தான் பிரித்து எடுக்கப்படுகின்றன. அதன் செயல்முறைகள் குறித்தும், கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 14 2026, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கச்சா எண்ணெய் ஏன் முக்கியமானது?
Image Credit : stockPhoto

கச்சா எண்ணெய் ஏன் முக்கியமானது?

ஈரானில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மூலமாகத்தான் நாம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய் போன்ற பல அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இந்த பதிவில் கச்சா எண்ணெய் ஏன் முக்கியமானது? அதிலிருந்து நாம் என்னென்ன பொருட்களை எடுக்கிறோம்? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

26
பின்ன காய்ச்சி வடித்தல்
Image Credit : stockPhoto

பின்ன காய்ச்சி வடித்தல்

கச்சா எண்ணெய் என்பது பலவிதமான ஹைட்ரோ கார்பங்களின் கலவையாகும். இதிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை பிரித்தெடுக்கும் முறைக்கு பின்ன காய்ச்சி வடித்தல் என்று பெயர். இந்த செயல்முறை ஒரு பெரிய கோபுர வடிவிலான கடனில் நடைபெறுகிறது. அது பல படிநிலைகளைக் கொண்டது. முதலில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணையை ஒரு பெரிய உலையில் இட்டு சுமார் 400 டிகிரி வெப்ப நிலைக்கு சூடாக்குவார்கள். இந்த வெப்ப நிலையில் எண்ணெய் ஆவியாக மாறும்.

Related Articles

Related image1
ஒருவர் வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம்.. கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க! தமிழ்நாட்டில் எவ்வளவு?
Related image2
டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!
36
கொதி நிலைக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்கள்
Image Credit : stockPhoto

கொதி நிலைக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்கள்

பின்னர் இந்த ஆவி ஒரு உயரமான கோபுரத்திற்குள் செலுத்தப்படும். இந்த கோபுரத்தின் அடிப்பகுதி வெப்பமாகவும், மேல் பகுதி செல்ல குளிர்ச்சியாகவும் இருக்கும். ஒவ்வொரு எரிபொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட கொதிநிலை உண்டு. அதாவது கோபுரத்தின் மேலே உயரும்பொழுது அதன் வெப்பநிலை குறையும். கோபுரத்தின் கீழ் அடுக்கில் அதிக கொதிநிலை கொண்ட பொருட்களான தார் போன்ற பொருட்கள் திரவமாகி அடியிலேயே தங்கி விடும்.

46
தார் முதல் சமையல் எரிவாயு வரை
Image Credit : ChaGPT

தார் முதல் சமையல் எரிவாயு வரை

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவை அவற்றின் கொதி நிலை வரும்பொழுது குளிர்ந்து திரவம் ஆகி தனித்தனி தட்டுகளில் சேமிக்கப்படும். பெட்ரோல் ஆவி இன்னும் மேலே சென்று குளிர்ச்சி அடைந்து திரவம் ஆகும். மிகக்குறைந்த கொதி நிலை கொண்ட பெட்ரோலிய வாயுக்கள் திரவமாகாமல் கோபுரத்தின் உச்சி வழியாக வெளியேறும்.

56
கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பொருட்கள்
Image Credit : X

கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பொருட்கள்

முதல் நிலையில் வெளியாகும் எல்பிஜி சமையல் எரிவாயு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அடுத்த நிலைகளில் வரும் பெட்ரோலானது கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மண்ணெண்ணெய் ஜெட், விமான எரிபொருள், விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. டீசலானது லாரி, பேருந்து, ரயில் போன்றவற்றில் பயன்படுகிறது. எஞ்சியவை சாலை போடு உதவும் தாராக பயன்படுத்தப்படுகிறது.

66
கச்சா எண்ணெய் மதிப்புமிக்க பொருள்
Image Credit : X

கச்சா எண்ணெய் மதிப்புமிக்க பொருள்

இவ்வாறு ஒரே கச்சா எண்ணெயிலிருந்து வெப்பநிலையை மற்றும் மாற்றி பயன்படுத்தி வெவ்வேறு எரிபொருட்களை நாம் பெறுகிறோம். அதனால் உலகிலேயே மிக மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாகவும், அதிக தேவை கொண்ட பொருளாகவும் கச்சா எண்ணெய் விளங்குகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
அறிவியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!
Recommended image2
தங்கம் இப்போ வாங்கலனா எப்போதும் வாங்க முடியாது! ஒரே நாளில் சரிந்த விலை! கடைகளில் குவியும் கூட்டம்!
Recommended image3
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..
Related Stories
Recommended image1
ஒருவர் வீட்டில் எவ்வளவு மதுபானங்களை வைத்திருக்கலாம்.. கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க! தமிழ்நாட்டில் எவ்வளவு?
Recommended image2
டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved