MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!

டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!

உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், சமையல் எரிவாயு விநியோகத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உங்கள் கேஸ் சிலிண்டர் சரியான எடையில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 11 2026, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கேஸ் சிலிண்டர் திருட்டை தவிர்ப்பது எப்படி?
Image Credit : X

கேஸ் சிலிண்டர் திருட்டை தவிர்ப்பது எப்படி?

மேற்கு ஆசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே உருவான பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கச்சா எண்ணெய் கடத்தலுக்கான முக்கியமான ஹார்மஸ் கடல்சந்தியை ஈரான் மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் பின்னணியில் சமையல் எரிவாயு விநியோகத்தில் தடை ஏற்படும் வாய்ப்பு குறித்து மக்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது.

25
கேஸ் டெலிவரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : X

கேஸ் டெலிவரி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில இடங்களில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகள் நடக்கலாம் என்ற புகார்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில வாடிக்கையாளர்கள், வீட்டிற்கு வரும் சிலிண்டர்கள் முழு எடையில் இல்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கேஸ் சிலிண்டரை வாங்கும்போது அதன் சரியான எடையை சரிபார்ப்பது மிகவும் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்
Related image2
கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!
35
எல்பிஜி சிலிண்டரின் எடை
Image Credit : Social Media

எல்பிஜி சிலிண்டரின் எடை

ஒரு சாதாரண வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டரின் மொத்த எடை சுமார் 29.7 கிலோ இருக்கும். இதில் உள்ள எரிவாயுவின் எடை 14.2 கிலோ ஆகும். காலியான சிலிண்டரின் சராசரி எடை சுமார் 15.5 கிலோ இருக்கும். எனவே, சிலிண்டரின் மொத்த எடை 29.7 கிலோவிற்கு குறைவாக இருந்தால் அதில் இருக்கும் எரிவாயு அளவு குறைவாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

45
சிலிண்டரை வாங்கும் முன் கவனிக்க வேண்டியது
Image Credit : Social Media

சிலிண்டரை வாங்கும் முன் கவனிக்க வேண்டியது

இதனை தவிர்க்க, சிலிண்டரை வாங்கும் முன் டெலிவரி பணியாளரிடம் எடை போட்டு காட்டுமாறு கேட்கலாம். பொதுவாக கேஸ் டெலிவரி வாகனங்களில் எடை பார்க்கும் கருவி இருக்கும். மேலும் வீட்டில் பயன்படுத்தப்படும் சிறிய ஹுக் வகை டிஜிட்டல் எடை கருவிகளும் கிடைக்கின்றன. இவை ரூ.200 முதல் ரூ.300 வரை விலையில் கிடைக்கும்.

55
கேஸ் சிலிண்டர் சரிபார்க்கும் வழி
Image Credit : X

கேஸ் சிலிண்டர் சரிபார்க்கும் வழி

மேலும், ஒவ்வொரு சிலிண்டரிலும் ‘டேர் வெயிட்’ எனப்படும் காலி சிலிண்டரின் எடை இரும்புக் கம்பியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை மொத்த எடையிலிருந்து கழித்தால் உள்ளே இருக்கும் கேஸ் அளவை தெரிந்து கொள்ளலாம். சிலிண்டரில் சீல் இருந்தாலும் கூட எரிவாயு திருட்டு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது, எடை சரிபார்ப்பதுடன் வால்வு பகுதியில் கசிவு உள்ளது ஈரமான கை அல்லது சோப்பு நீர் மூலம் பரிசோதிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வாயு உருளை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்படுமா?
Recommended image2
Essential Commodities Act: LPG முதல் கோதுமை வரை... இந்த சட்டம் எப்போதெல்லாம் ஏவப்பட்டது?
Recommended image3
ஜாக்கிரதை.! உங்கள் செல்போன் சிக்னல் துண்டிக்கப்படலாம்? LPG தட்டுப்பாட்டால் முடங்குகிறதா இந்திய டெலிகாம் துறை?
Related Stories
Recommended image1
டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்
Recommended image2
கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved