MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!

கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து உருவாகும் கவலைகள் காரணமாக பல குடும்பங்கள் சமையலுக்கு மாற்று வழிகளை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் சமையலை தொடர உதவும் பல சாதனங்கள் மற்றும் முறைகள் உள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 11 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கேஸ் இல்லாமல் சமையல் செய்யும் முறைகள்
Image Credit : Google

கேஸ் இல்லாமல் சமையல் செய்யும் முறைகள்

சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை உயர்வு மற்றும் விநியோக தாமதம் குறித்து பல இடங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால், பல குடும்பங்களில் கவலை அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் எல்பிஜி மீது தான் சமையலுக்கு நம்பிக்கை வைத்திருக்கின்றன. ஆனால் சில நேரங்களில் விநியோக தடை அல்லது விலை உயர்வு ஏற்பட்டால் மாற்று வழிகள் தேவை. இந்த வீட்டில் சமையலை தொடர உதவும் பல பயனுள்ள மாற்று வழிகள் உள்ளன.

26
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
Image Credit : Social Media

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

உலகளாவிய எரிசக்தி சந்தை மாற்றங்கள் மற்றும் சில அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விநியோக சங்கிலிகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் தாக்கமாக சில பகுதிகளில் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிலர் முன்னதாகவே சிலிண்டர்களை பதிவு செய்ய ஆரம்பித்ததால் காத்திருக்கும் காலமும் அதிகரித்துள்ளது. சில உணவகங்கள் மற்றும் சிறு உணவு வணிகங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
விலை ஏறுனா என்ன..? நம்ம கேஸ் குறையாது.. இல்லத்தரசிகளுக்கான 7 மேஜிக் டிப்ஸ் இதோ..!
Related image2
டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்
36
இன்டக்ஷன் அடுப்பு
Image Credit : Google

இன்டக்ஷன் அடுப்பு

இந்த சூழ்நிலையில் எல்பிஜிக்கு மாற்றாக அதிகம் பயன்படுத்தப்படும் சாதனம் இன்டக்ஷன் அடுப்பு ஆகும். மின்சாரத்தில் இயங்கும் இந்த சாதனம் காந்த அலைகள் மூலம் பாத்திரத்தை சூடாக்கி வேகமாக உணவை சமைக்க உதவுகிறது. பாதுகாப்பு அம்சங்களும் இதில் அதிகம் உள்ளதால் பல வீடுகளில் இது ஏற்கனவே முக்கிய சமையல் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இது நல்ல மாற்று தீர்வாக இருக்கும்.

46
எலக்ட்ரிக் பிரஷர் குக்கர்
Image Credit : Google

எலக்ட்ரிக் பிரஷர் குக்கர்

மேலும் எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் தற்போது பல சமையலறைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல வகை உணவுகளை எளிதாக சமைக்க முடியும். பிரஷர் குக்கிங், ஸ்டீமிங் போன்ற பல வசதிகள் ஒரே சாதனத்தில் கிடைப்பதால் சமையல் நேரமும் குறைகிறது. இதனை பயன்படுத்துவதால் எல்பிஜி பயன்பாடு குறைய வாய்ப்பு உள்ளது.

56
சோலார் குக்கர்
Image Credit : Google

சோலார் குக்கர்

மற்றொரு சுற்றுச்சூழல் நட்பு தீர்வு சோலார் குக்கர் ஆகும். சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு சமைக்கும் இந்த முறை எரிபொருள் தேவையற்றதாகும். வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. மேலும் பயோகேஸ் அமைப்புகள் மூலம் சமையல் கழிவுகள் அல்லது வேளாண் கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு உருவாக்கி சமையலுக்கு பயன்படுத்தலாம்.

66
ஏர் ஃப்ரையர்
Image Credit : Google

ஏர் ஃப்ரையர்

மேலும் ஏர் ஃப்ரையர் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்கள் எரிவாயு பயன்பாட்டை குறைக்க உதவுகின்றன. இவை உணவை சூடாக்க, பேக் செய்ய அல்லது விரைவான உணவுகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரே எரிபொருளை மட்டுமே நம்பி இருப்பதை விட, இந்த மாதிரி மாற்று சமையல் முறைகளை பயன்படுத்துவது குடும்பங்களுக்கு எதிர்கால செலவு கட்டுப்பாட்டையும், சமையலில் சுலபத்தையும் வழங்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வாயு உருளை
சமையல் எரிவாயு
உணவு
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
விலை ஏறுனா என்ன..? நம்ம கேஸ் குறையாது.. இல்லத்தரசிகளுக்கான 7 மேஜிக் டிப்ஸ் இதோ..!
Recommended image2
குடிநீரில் TDS குறைந்தால் உயிருக்கே ஆபத்தா? RO வாட்டர் பற்றி மருத்துவர்கள் சொல்லும் 'சீக்ரெட்'!
Recommended image3
20 ஆண்டு ஹோம் லோனை வெறும் 10 ஆண்டாக குறைக்கும் மியூச்சுவல் பண்ட் சீக்ரெட்..
Related Stories
Recommended image1
விலை ஏறுனா என்ன..? நம்ம கேஸ் குறையாது.. இல்லத்தரசிகளுக்கான 7 மேஜிக் டிப்ஸ் இதோ..!
Recommended image2
டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved