MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்

டீ, காபி இல்லை.. சப்பாத்தி, தோசை நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தலைதூக்கும் சைலண்ட் லாக்டவுன்

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியாவில் வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் டீ, காபி, தோசை போன்ற உணவுகளை நிறுத்தி, தங்கள் உணவுப் பட்டியலைக் குறைத்துள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 11 2026, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ்நாட்டில் டீ, காபி, தோசை நிறுத்தம்
Image Credit : Google

தமிழ்நாட்டில் டீ, காபி, தோசை நிறுத்தம்

சர்வதேச அரசியல் பதற்றத்தின் தாக்கம் தற்போது இந்தியாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயு (எல்பிஜி) வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பல நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த நிலை காரணமாக சில இடங்களில் உணவுப் பட்டியலும் குறைக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல், வணிக எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்காத சூழ்நிலை காரணமாக தங்களின் மெனுவை மிகவும் குறைத்துள்ளது. அங்கு தற்போது காபி மற்றும் டீ மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற உணவுகளை தயாரிக்க தேவையான எரிவாயு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

24
சென்னையில் பிஜிகளில் டீ, காபி கிடையாது
Image Credit : Social Media

சென்னையில் பிஜிகளில் டீ, காபி கிடையாது

இதற்கிடையில் சென்னையிலும் இதே போன்ற நிலை உருவாகி வருகிறது. தமிழ்நாடு தங்கும் விடுதி மற்றும் உணவுடன் தங்கும் விடுதிகளின் நலச்சங்கம், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் டீ மற்றும் காபி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பார் மற்றும் குருமா போன்ற உணவுகளுக்கும் மாற்றமாக சட்னி வழங்கப்படும் என சங்கம் கூறியுள்ளது. மேலும், சைட் டிஷ்களுக்கு பதிலாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முட்டை மற்றும் பாப்ஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குடன் கலவை சாதங்கள் அதிகமாக வழங்கப்படும், கூடுதலாக அப்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Now Playing
வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Related image2
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
34
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
Image Credit : Social Media

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

இந்த நிலை உருவாகக் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஹார்மஸ் கடல்சந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதால் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட தொடங்கியுள்ளது.

கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி சுமார் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக இந்தியாவின் பல பகுதிகளில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உணவகங்கள் செயல்படுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

44
உணவகங்கள், விடுதிகளில் புதிய விதிமுறை
Image Credit : X

உணவகங்கள், விடுதிகளில் புதிய விதிமுறை

சென்னையில் தற்போது சுமார் 20 சதவீத ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தட்டுப்பாடு மேலும் சில நாட்கள் நீடித்தால் ஹோட்டல்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் இளைஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வாயு உருளை
உணவு விடுதி வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்.. எச்சரித்த கையோடு மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image2
குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
10-ஆம் வகுப்பு தமிழ்: அதிக மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் குறிப்புகள்
Related Stories
Recommended image1
Now Playing
வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Recommended image2
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved