- Home
- Business
- அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
ESMA - Essential Services Maintenance Act : இந்தியாவில் எரிவாயு மற்றும் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு எஸ்மா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ESMA - (Essential Services Maintenance Act)
உலக அளவில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்பிஜியில் 60% க்கும் அதிகமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
போர் பதற்றம் & கப்பல் போக்குவரத்து சேவை பாதிப்பு
ஈரானில் நிலவிவரும் போர் பதற்றம் மற்றும் கப்பல் போக்குவரத்து சேவை நின்று போனதால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு வணிக சிலிண்டர்களை விட வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. எனவே சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நாட்டின் பல நகரங்களில் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு தேவையான சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மூடல்
பெரும்பாலான நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஹோட்டல் உணவினை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களும், ஹோட்டல் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்னும் சில உணவுகள் வெரைட்டி உணவுகளை வழங்க முடியாது என்றும், குருமா, சாம்பார், தோசை, ஆம்லேட் போன்ற உணவுகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் அறிவிப்பு பலகை வைத்துவிட்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகியவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எஸ்மா சட்டம் அறிமுகம்
மேலும் சிலிண்டர் விநியோகத்திற்கு முன்பதிவு காலத்தை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ESMA - (Essential Services Maintenance Act) என்பது அவசிய பொருட்கள் பராமரிப்புச் சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் வணிகர்கள் அல்லது தனி நபர்கள் சிலிண்டர்களை பதிக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
இந்த புதிய சட்டத்தின் படி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். எரிவாயு விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்கு தடையில்லாமல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள 332 மில்லியன் எல்பிஜி சந்தாதாரர்களுக்கு இந்த சட்டம் மூலம் எரிவாய் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை
மத்திய அரசு எல்பிஜி உற்பத்தி, விநியோகம், சப்ளை, வர்த்தகம் உள்ளிட்டவற்றை கண்காணித்து அதை ஒழுங்குபடுத்தக்கூடிய முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் செயற்கையான தட்டுப்பாட்டுகளை உருவாக்குவது முற்றிலும் தடுக்கப்படும். அதேபோல் கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்வது நிறுத்தப்படும். மேலும் எண்ணெய் நிறுவனங்களும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான எல்பிஜி உற்பத்திக்கு முன்னுரிமை கொடுப்பதை இந்த சட்டம் உறுதி செய்யும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

