- Home
- Business
- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! வங்கி கணக்கில் லட்சங்களில் குவியப்போகும் தொகை.! 8th Pay Commission Latest Update
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! வங்கி கணக்கில் லட்சங்களில் குவியப்போகும் தொகை.! 8th Pay Commission Latest Update
8th Pay Commission Latest Updates : 8-வது ஊதிய குழுவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் தோராய அரியர் தொகை விவரங்கள் மற்றும் அதற்கான கணக்கீடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

8th Pay Commission Arrears
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால கோரிக்கையான எட்டாவது ஊதியக்குழு பணிகள் துரிதமடைந்துள்ளன. இந்த செய்தி தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குரூப் ஏ முதல் குரூப் டி வரையிலான அனைத்து நிலை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு மட்டும் இன்றி இலட்சக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
8th Pay Commission Latest Updates
பொதுவாக மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அமைக்கும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 அமல் அமல்படுத்தப்பட்டன. அந்த கணக்கின்படி 2026 ஜனவரி முதல் எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவேண்டும். ஆனால் இதில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் 2027 ஜனவரி முதல் எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும். 2027 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டால், 2026-லிருந்து முன் தேதியிட்டு அரியர் தொகை கணக்கிடப்படும்.
ஃபிட்மெண்ட் ஃபேக்டர்
ஊதிய உயர்வு கணக்கிடப்படுவதற்கு ஃபிட்மெண்ட் ஃபேக்டர் மிக முக்கியமான காரணியாகும். ஏழாவது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக இருந்தது. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில் ஊழியர் சங்கங்கள் இதை 3.68 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. ஒருவேளை அரசு இதை 3.0 ஆக நிர்ணயித்தாலும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் பெருமளவு உயரும்.
8வது ஊதியக்குழு அரியர் தொகை கணக்கீடு
அரியர் தொகை = (புதிய அடிப்படை ஊதியம் - பழைய அடிப்படை ஊதியம்) x நிலுவை மாதங்களின் எண்ணிக்கை + (DA + HRA + பிற கொடுப்பனவுகளில் உள்ள வேறுபாடு)
எட்டாவது ஊதிய குழுவின் ஃபிட்மென்ட் ஃபேக்டர் தோராயமாக 3.0 வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது அரியர் தொகையானது அடிப்படை ஊதியத்தை விட தோராயமாக 2.9 மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
எவ்வளவு அரியர் தொகை எதிர்பார்க்கலாம்?
Group A:
- 7வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம் (சராசரி): ரூ.56,100 (ஆரம்ப நிலை)
- 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதியம்: ரூ.1,60,000. வேறுபாடு : ரூ.1,03,900.
- 12 மாத நிலுவைத் தொகை: ரூ.12.46 லட்சம்.
Group B:
- 7வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம் (சராசரி): ரூ.35,400.
- 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதியம்: ரூ.1,00,00.
- வேறுபாடு : ரூ.64,600.
- 12 மாத நிலுவைத் தொகை: ரூ.7.75 லட்சம்.
Group C:
- 7வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம் (சராசரி): ரூ.25,500.
- 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதியம்: ரூ.72,000.
- வேறுபாடு : ரூ.46,500.
- 12 மாத நிலுவைத் தொகை: ரூ.5.58 லட்சம்.
Group D:
- 7வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம் (சராசரி): ரூ.52,000.
- 8வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதியம்: ரூ.52,000.
- வேறுபாடு : ரூ.34,000.
- 12 மாத நிலுவைத் தொகை: ரூ.4.08 லட்சம்.
DA மற்றும் HRA இன்னும் இவற்றில் சேர்க்கப்படவில்லை. எனவே, சம்பளம் மேலும் அதிகரிக்கும்.
தோராயமாக எவ்வளவு கிடைக்கும்?
குரூப் ஏ அதிகாரிகள் சுமார் ரூ.12 முதல் ரூ.15 லட்சம் நிலுவைத் தொகையைப் பெறலாம். குரூப் பி ஊழியர்களுக்கு ரூ.7 முதல் ரூ.9 லட்சம் வரை பெறலாம். குரூப் சி ஊழியர்களுக்கு ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரையும், குரூப் D ஊழியர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிலுவைத் தொகையைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற பலன்கள்
நகரங்களின் தரவரிசைக்கு ஏற்ப வீட்டு வாடகைப்படி கணிசமாக உயரும். சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் தொகை அடிப்படை ஊதிய உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கும். கல்வி படி, பயணப்படி மற்றும் மருத்துவ படிகள் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கணக்கீடுகள் மற்றும் பிற தகவல்கள் முற்றிலும் தோராயமானது. துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களை அணுக ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பரிந்துரைக்கிறது)
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

