Tamil News live : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்... SDPI-யை சேர்ந்த இருவர் கைது!!
சுருக்கம்
கோவை குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக எஸ்டிபிஐயை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கிடைத்த சிசிடிவி பதிவின் அடிப்படையில் எஸ்டிபிஐ சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் ஜேசுராஜ், இலியாஸ் என்று தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
ஒரு போட்டோவுக்காக என்ன பாடு படுத்துறாங்க...சிக்கி தவிக்கும் பொன்னியின் செல்வன் டீம்
தங்களது சரியான பொசிஷனில் நிற்க தடுமாறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதோட தனது டீமை வெயிலிலிருந்து செக்யூர் பண்ணும் ஜெயம் ரவியின் க்யூட் காட்சிகளும் அதில் இடம் பிடித்துள்ளது.
ஷாருக்கானின் கட்டுடலை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்..என்னமா மெயிண்டன் பன்றாரு !
மேலும் ஷாருக்கானின் புகைப்படத்திற்கு கிங் மீண்டும் வருகிறார் என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு ரசிகர் வயது ஏற ஏற உங்களுக்கு ஹாட் அதிகமாகிறது எனவும் கூறியுள்ளனர்.
சுருளி அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. படையெடுத்த சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள சின்ன சுருளி அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் காரணமாக நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. மேலும் படிக்க
05:35 PM (IST) Sep 25
நீரில் மிதந்தவாறு 15 யோகசானங்களை செய்து புதிய சாதனை படைத்து யோகா ஆசிரியர்..
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சஹானா எனும் யோகா மையத்தை நிறுவி, அதன் மூலம் பலருக்கும் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார்.மேலும் படிக்க
05:09 PM (IST) Sep 25
அதிர்ச்சி !! பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்.. இது தான் காரணமா.?
உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் ராம் ஸ்வரூப் இன்டர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இன்று வழக்கம் போல் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, 12 ஆம் வகுப்பறையில் நூழைந்த போது, மாணவன் குர்விந்தர் சிங், தான் ஒளித்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான்மேலும் படிக்க
04:43 PM (IST) Sep 25
1,000 ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்த மனைவி.. கணவனுக்கு தெரிந்ததால் மனைவி எடுத்த அதிரடி முடிவு
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த லிங்கை க்ளிக் பண்ணாதீங்க..அசிங்க படுத்திடுவாங்க...கதறி அழும் சீரியல் நடிகை
தயவு செய்து இது போன்ற பேக் மெசேஜ் வந்தால் லிங்கை கிளிக் செய்யாதீர்கள். தேவையில்லாத லோன் ஆப்புகளை டவுன்லோட் செய்யாதீர்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
திருவேங்கடநாதபுரம் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சிறு குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வெங்கடாசலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.மேலும் படிக்க
03:30 PM (IST) Sep 25
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..
அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் படிக்க
03:16 PM (IST) Sep 25
ஒரு வழியாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி ...வைரலாகும் ரொமாண்டிக் ப்ரோமோ
பின்னர் காதல் பாடல் ஒலிக்க இவர்களது காதல் காட்சி அரங்கேறுகிறது. இன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்..
நேற்று லாஸ் வேகாஸ்... இன்று ஹாலிவுட்..! உலகளவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் - வைரலாகும் வீடியோ
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொன்னியின் செல்வன் பட நட்சத்திரங்கள், அப்படத்தை முழுவீச்சில் புரமோட் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், உலகளவிலும் பிரம்மாண்டமாக புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க
02:58 PM (IST) Sep 25
15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே
நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் உள்ள நகராட்சி சந்தையில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க
02:36 PM (IST) Sep 25
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவு நாளில்..மனதை கவர்ந்த பாடல்களில் சில
இந்நாளில் எஸ்பிபி குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களின் சில தொகுப்புகளை காணலாம்.
பொன்னியின் செல்வனில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் பெற்ற பிரபலங்கள்... அதிக சம்பளம் யாருக்கு?- முழு விவரம் இதோ
மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அவர்களுக்கு இப்படத்தில் நடிக்க வழங்கப்பட்ட சம்பளம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க