ஜெசிக்கா என்னும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. இந்நிலையில் இந்த பாடலின் ஸ்டெப் ஜெசிக்கா சேலஞ்ச் என்னும் பெயரில் ட்ரெண்டாகி வருகிறது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தில் நடித்திருந்தார். சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படம் வெளியாகி இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. காலேஜ் லைப்போடு , தந்தை பாசத்தை கொட்டி ரசிக்க வைத்தது அதோடு நல்ல வசூலையும் குவித்தது . இதையடுத்து தற்போது சிவகார்த்தியேகன் நடிப்பில் பிரின்ஸ், அயலான், மாவீரன் ஆகிய மூன்று படங்கள் கையில் உள்ளன. இந்த படத்தில் வெளிநாட்டு நாயகி மரியா ரியான்ஷாப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் டோலிவுட்டிற்கு அறிமுகமாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசை அமைக்கும் இந்த படம் முன்னதாக ஆகஸ்ட் 31-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...நாம் நினைப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதில்லை...புலம்பித்தள்ளிய பிரபல நடிகையின் மகள்

YouTube video player

முன்னதாக ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன், மரியா ரியான்ஷாப்கா, சத்யராஜ் மற்றும் இயக்குனர் அனுதீப் நடித்த காட்சிகள் மூலம் அறிவித்தது படக்குழு இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. பிம்பிளிக்கி பிலாபி என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதையடுத்து தற்போது இரண்டாவது சிங்கள் வெளியாகியுள்ளது. ஜெசிக்கா என்னும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. இந்நிலையில் இந்த பாடலின் ஸ்டெப் ஜெசிக்கா சேலஞ்ச் என்னும் பெயரில் ட்ரெண்டாகி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு...ரொனால்டு காரை பரிசாக கொடுத்த உலகநாயன்

Scroll to load tweet…