ரசிகர்களிடம் வீணாக ஓட்டு வாங்கி எலிமினேஷன் என்ற பெயரில் கண்துடைப்பை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதாகவும் கூறியுள்ளார் அபிநயா ஸ்ரீ.

ரியாலிட்டி ஷோக்களில் டாப் ரேட்டிங்கில் இருப்பது பிக் பாஸ் ஷோ தான். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த ஷோ பிரபலம். 100 நாட்கள் செலிபிரிட்டிகளை ஒரு வீட்டிற்குள் தங்க வைத்து ரசிகர்கள் மூலம் ஓட்டிங் பெற்று யார் வெற்றியாளர்கள் என தீர்மானிப்பதே பிக் பாஸ் ஷோ. இந்த ஷோவிற்கு ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான சூப்பர் ஸ்டார்களே தொகுத்து வழங்கு வருகின்றன. அந்த வகைகளில் தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். முன்னதாக ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஆறாவது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறு சீசனில் பிரபல நடிகை அனுராதாவின் மகள் அபிநயாஸ்ரீ கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது பிரபல சேனல் ஒன்றிற்கு கொடுத்துள்ள குமுரல் பேட்டிதான் வைரலாகி வருகிறது. இவரும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிகையாக வலம் வருபவர். இவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். ஷோ ஆரம்பித்து சில வாரங்களிலேயே அபிநயா ஸ்ரீ வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...தன்னை இளமையாய் மாற்றிய பிட்னஸ் ட்ரைனருக்கு...ரொனால்டு காரை பரிசாக கொடுத்த உலகநாயன்

View post on Instagram

இது குறித்த பிரபலசேனல் ஒன்றுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், நாம் நினைப்பது போல பிக் பாஸ் நிகழ்ச்சி நடப்பதில்லை. பிக் பாஸ் வீட்டில் தன்னை அவர்கள் காட்டவே இல்லை. தான் செய்த டாஸ்க்கள் மற்றும் மற்ற ஹவுஸ் மேட்களுடன் வாக்குவாதம் செய்த எந்த காட்சிகளையும் காட்டவில்லை. அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே காட்டியுள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார். அதோடு கமலஹாசனை போல அல்லாமல் தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் நாகர்ஜுனா அவருக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே அதிக உரையாடுவதாகவும், தன்னிடம் பேசுவது கூட இல்லை என மிகப் பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அபிநயா ஸ்ரீ.

மேலும் செய்திகளுக்கு...ஷாருக்கானின் கட்டுடலை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்..என்னமா மெயிண்டன் பன்றாரு !

View post on Instagram

இதுகுறித்து அவரது தாயார் அனுராதா சுபாஷ் நிகழ்ச்சி நிறுவனத்திற்கு போன் செய்து ஏன் தன் மகளை காட்டவில்லை என்று கேட்டதாகவும், தன்னை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதை கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ளவே இயலாது என்றும், ரசிகர்களிடம் வீணாக ஓட்டு வாங்கி எலிமினேஷன் என்ற பெயரில் கண்துடைப்பை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதாகவும் கூறியுள்ளார் அபிநயா ஸ்ரீ. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவரது இன்ஸ்டாகிராம் பேஜ் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த காட்சிகள் தான் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram