ஷாருக்கானின் கட்டுடலை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்..என்னமா மெயிண்டன் பன்றாரு !
மேலும் ஷாருக்கானின் புகைப்படத்திற்கு கிங் மீண்டும் வருகிறார் என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு ரசிகர் வயது ஏற ஏற உங்களுக்கு ஹாட் அதிகமாகிறது எனவும் கூறியுள்ளனர்.
விஜயின் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வடிவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்று இருந்தது. அதில் முகம் முழுவதும் பேண்டேஜ் உடன் கையில் மேப் எடுத்துக்கொண்டு நாயகன் யாரையோ தேடி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த டீசர் படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.
அதோடு ஷாருக்கான் தற்போது பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியாவை பாதுகாப்பு எந்திரத்தை கிழித்தெரிய முயலும் வில்லனை எதிர்த்து போராடும் ரோலில் நடித்துள்ளார் ஷாருக்கான். இந்த படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தனது மகன் போதை பொருள் வழக்கில் சிக்கி இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த ஷாருக்கான் தற்போது அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து முழு நேரமும் படங்களில் பிசியாக இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் கவர்ச்சியில் அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி
இந்த பிஸி செட்யூலிலும் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி உள்ளார். அதாவது சோபாவில் படுத்தபடி சட்டையின்றி அவர் கொடுத்திருந்த காட்சிகள் தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஷாருக்கான் தனது சிக்ஸ் பேக்கை காட்டுகிறார்.இதை கண்ட ரசிகர்கள் பாலிவுட் தந்தை என புகழ்வதோடு சில நிமிடங்களிலேயே 8 லட்சம் லைக்குகளை தாண்டி கமெண்ட்டுகளும் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...இந்த லிங்கை க்ளிக் பண்ணாதீங்க..அசிங்க படுத்திடுவாங்க...கதறி அழும் சீரியல் நடிகை
அந்த புகைப்படத்தோடு இன்று நான் என் சட்டையில் இருந்து விடுபடுகிறேன். நீங்கள் இருந்ததால் எப்படி இருப்பீர்கள். இதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இதை பார்த்து எவ்வளவு சிரித்திருப்பீர்கள் எனக்கு அது நடந்திருக்கும் . என எழுதியுள்ளார். பதான் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஷாருக்கானின் புகைப்படத்திற்கு கிங் மீண்டும் வருகிறார் என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு ரசிகர் வயது ஏற ஏற உங்களுக்கு ஹாட் அதிகமாகிறது எனவும் கூறியுள்ளனர்.