- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Chellame Chellame Serial Vikram Refuses Remarriage : விக்ரமிற்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க அவரது அம்மா ஏற்பாடு செய்த நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

செல்லமே செல்லமே சீரியல் இன்றைய எபிசோடு
செல்லமே செல்லமே சீரியலில் விஜியை ஆபாசமாக வீடியோ எடுத்த சுந்தரபாண்டியனை தன் முதலாளியிடம் சொல்ல போகும் விஜி அதனை தடுத்து நிறுத்தும் சுந்தர பாண்டியன் என்ற ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் சுந்தரபாண்டியன் விஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். விக்ரமை கட்டாயப்படுத்தும் அம்மா: உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிக்கிறது உங்களுடைய சந்தோஷத்திற்காக இல்லடா உன்னோட சந்தோசத்துக்காகவும் நவீனோடு எதிர்காலத்துக்காகவும், உங்களுக்கு அப்புறம் உனக்கும் என் பேரனுக்கும் ஒரு துணை இருக்கணும்னு அதுக்காக தான் டா நான் சொல்லிட்டு இருக்கேன்.
இதையும் படியுங்கள்: Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
வீட்டை விட்டு வெளியேறும் விக்ரம்
தயவு செஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கோடா. நான் சாப்பிடுறதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கணும்னு உன் பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா வாழ்றத பாத்துட்டு நிம்மதியா தாண்டா நான் போய் சேரனும். என்றெல்லாம் விக்ரமின் அம்மா மிகவும் கண்ணீருடன் மனக் கவலையுடன் பேசுகிறார். மருதிருமணத்தை மறுக்கும் விக்ரம்: அதற்கு விக்ரம் அம்மா நீ எமோஷனலா பேசி என்ன சொன்னாலும் என் மனசு மாறவே மாறாது. நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இந்த ஜென்மத்துல எனக்கு இன்னொரு கல்யாணம் கிடையவே கிடையாது இன்று உறுதியாக சொல்கிறார் . இதுதான் உன் முடிவா என்று கோபமாக கேட்கிறார் விக்ரமின் அம்மா அதற்கு விக்ரம் ஆமா என்று சத்தமாக சொல்கிறார்.
2ஆவது திருமணத்திற்கு மறுப்பு
இந்த விஷயத்தை என்னால் இதோட விட முடியாது ஏற்கனவே உன்னைய கல்யாணம் பண்ணாத சொன்னப்போ என் பேச்சை மீறி ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துகிட்ட. ஆனா இப்போ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றேன் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறேன்.இந்த தடவையும் உன் விருப்பத்துக்கு விட்டு உன் வாழ்க்கையை கெடுக்கிறத பாக்குற சக்தி எனக்கு இல்ல. என்ன சொன்னாலும் நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம உன்னை விடவே மாட்டேன் என்று நீங்கள் கோபத்துடன் கூறுகிறார். அதற்கு விக்ரம் கேக்க மாட்டீங்களா இதுக்கு அப்புறம் உங்க கிட்ட பேசி பிரயோஜனமே இல்லை என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.
மயங்கி விழுந்த விக்ரமின் அம்மா
விக்ரமின் அம்மா தெய்வானை மயங்கி விழுகுதல்: விக்ரம் வீட்டை விட்டு கிளம்பியதும் அதிர்ச்சி அடைந்த தெய்வானை மிகவும் வருத்தத்துடன் கண்ணீருடன் நின்று கொண்டிருக்கிறார். அனைவரும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தெய்வானை மயங்கி விழுகிறார். அதிர்ச்சி அடைந்த விக்ரம் அனைவரும் என்னாச்சு? என்னாச்சு என்று பயத்துடன் இருக்கின்றனர். தெய்வானை ஆம்புலன்ஸ் கூப்பிட என்று கத்தி கூச்சலிடுகின்றனர். விக்ரம் ஓடி சென்று தண்ணியை எடுத்துக்கொண்டு வருகிறார் தண்ணியை எடுத்து தெய்வானை முகத்தில் தெளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!