1,000 ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்த மனைவி.. கணவனுக்கு தெரிந்ததால் மனைவி எடுத்த அதிரடி முடிவு
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ஞானசெல்வன்(32) நாகல்கேணியில் உள்ள லெதர் கம்பனியில் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி வகிதா ப்ளோரா (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடி 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..‘ஊழலை நிரூபிச்சு காட்டுங்க பிடிஆர்.. அரசியலில் இருந்து விலக தயார்’ - மாஸ் காட்டிய செல்லூர் ராஜு !
அப்போது வகிதா ப்ளோரா தனது அம்மா வீட்டிற்க்கு செல்வதாக கூறிவிட்டு கணவர் இருந்த அறையை டாப்பால் போட்டுவிட்டு மற்றொரு அறையில் மின்விசிரியில் புடைவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஞான செல்வன் கூச்சலிட்டதை கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது வகிதா ப்ளோரா தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?
தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டுள்ள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?