வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?
சீனா அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜின்பிங் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சீனா திரும்பினார். அப்போது, அவர் சீன ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் 80 கி.மீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் சீன அதிபர்களாக ஹூ ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரரதமர், வெஞ்சிபாவோ ஆகியோர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”
அதுமட்டுமின்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற தலைவர்கள் மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து அதிபர் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது இப்படியிருக்க, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ‘அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இது உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
கடந்த வாரத்தில் சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!