கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!
மனைவி ஒருவர் தனது கணவருடன், அவரது முன்னாள் காதலியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண். பிரபல டிக் டாக்கரான இவர், விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு கல்யாண் கடப்பாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும், சில சிக்கல்களால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் விமலாவுக்கு தெரியாது.
மேலும் செய்திகளுக்கு..மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நித்யஸ்ரீ கல்யாணை சந்திக்க திருப்பதிக்கு வந்துள்ளார். அப்போதுதான் கல்யாணுக்கு திருமணமான விவகாரம் தெரிந்துள்ளது. அந்தக் காதலை மறந்து விட்டு தன்னை திருமணம் செய்து கொண்டதையும் அறிந்துள்ளார். இதனையடுத்து கணவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த விமலா, கணவரின் முன்னாள் காதலியை தேடிச்சென்றார். அதன்படி நித்யஸ்ரீயை தேடிக் கண்டுபிடித்த அவர், அவரை தன் கணவருக்கே இரண்டாவதா திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்
3 பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் எழுதி வாங்கிக் கொண்ட விமலா, கணவர் மற்றும் அவரின் காதலியுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார். இது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. சூர்யா, ஜோதிகா, பூமிகா நடித்த ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் வருவதை போல சம்பவம் நடைபெற்றுள்ளதால் நெட்டிசன்கள் இந்த படத்தையும், சம்பவத்தையும் ஒட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”