
அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் கட்டுமான குழுத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, முன்னாள் ஆசியாநெட் நியூஸ் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் கல்ராவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இப்புத பார்ப்போம்.
பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்த்திருந்த அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் கட்டுமானக் குழுத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, முன்னாள் ஆசியாநெட் நியூஸ் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் கல்ராவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கோயிலின் முழு கட்டுமானப் பயணம் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பேட்டியில், கோயில் கட்டுமானத்திற்கான ஆரம்பத் திட்டமிடல், எதிர்கொண்ட சவால்கள், நவீன பொறியியல் தொழில்நுட்பங்கள், பக்தர்களிடமிருந்து கிடைத்த நன்கொடைகள், கட்டுமானத்தின் முக்கிய மைல்கற்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன.
மேலும், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யாத்திரிகர் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் நிர்பேந்திர மிஸ்ரா விளக்கமளிக்கிறார்.
அதோடு, கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட அரிய காட்சிகளும் (Exclusive Visuals) இந்த நேர்காணலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக மற்றும் கலாச்சார அடையாளமாக உருவெடுத்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் உருவாக்கப் பயணத்தை அறிய விரும்புபவர்களுக்கு இந்தப் பேட்டி ஒரு முக்கிய ஆவணமாக அமைகிறது.