- Home
- Tamil Nadu News
- Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Chennai Murder: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாலிபரின் உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சென்டிரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு மின்சார ரயில்கள் செல்லும் 4வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. நீண்ட நேரம் கேட்பாற்று இருந்ததை அடுத்து ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் யாராவது, அவசரமாக ரயிலில் ஏறும்போது அந்த சூட்கேசை தவறவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி
ஆனால் சூட்கேஸ் வழக்கத்துக்கு மாறாக அதிக வெயிட்டாக இருந்ததால் சந்தேகமடைந்து திறந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சூட்கேஸில் கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது வந்தது.
Crime: 26 வயது மருமகள் மீது ஆசை! 66 வயது மாமனார் செய்த வேலையை பாருங்கள்! விசாரணையில் அதிர்ச்சி
சிசிடிவி காட்சிகள்
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துகுமார் தலைமையில் 6 தனிப்படைகளும், ரயில்வே போலீசார் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதனிடையே அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் தலை இல்லாத முண்டத்தை சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து பெரம்பூர் ரயில் நிலைய 4-வது நடைமேடை பகுதியில் வைத்துவிட்டு, மீண்டும் அதே ஆட்டோவில் தப்பிச்சென்று இருப்பது தெரியவந்தது.
மனைவி மற்றும் ஆண் நண்பர் கைது
இந்த காட்சிகளை வைத்து தீவிர விசாரணைக்கு பிறகு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், இவரை கொலை செய்தது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அமீர் அலியின் மனைவி ரஹூமா அளித்த வாக்குமூலத்தில் மயக்க நிலையில் இருந்த போது துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளார். வெட்டிய உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசியதாகவும் அதற்கு நண்பர் அஸ்ராம் உதவியதாக கூறியுள்ளார்.

