- Home
- Tamil Nadu News
- Crime: 26 வயது மருமகள் மீது ஆசை! 66 வயது மாமனார் செய்த வேலையை பாருங்கள்! விசாரணையில் அதிர்ச்சி
Crime: 26 வயது மருமகள் மீது ஆசை! 66 வயது மாமனார் செய்த வேலையை பாருங்கள்! விசாரணையில் அதிர்ச்சி
Crime: திருப்பத்தூர் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி விதவை மருமகளை மாமனார் கர்ப்பமாக்கியுள்ளார். ஆரம்பத்தில் வேறு யாரோ காரணம் என கூறிய நிலையில், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளிவந்ததை அடுத்து மாமனார் கைது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மகன்
திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(66). இவருக்கு ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மகனுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாமனாருக்கு மருமகள் மீது ஆசை
கணவர் இறந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் மாமனார் வீட்டில் 26 வயது மருமகள் வசித்து வந்தார். மகன் இறந்த பிறகு மருமகள் மீது மாமனாருக்கு திடீரென ஆசை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது மருமகளை அடைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி மருமகளிடம் சென்று உனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது ஆசையை தீர்த்து கொண்டார்.
மருமகள் கர்ப்பம்
இதில் மருமகள் கர்ப்பமாகியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாமானார் ஆனந்தராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மாமனார் கூறியுள்ளார். ஆனால் நாளடைவில் இந்த விவகாரம் வெளியே தெரிவந்ததை அடுத்து தன்னை யாரோ பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
இதனை கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க செய்தனர். அப்போது போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கூறினார்.
வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் ஆனந்தராஜை கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மருமகளை மாமனார் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

