MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • KN Nehru: கே.என்.நேருவுக்கு சுத்துப்போட்ட முதல்வர் விஜய்.! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! நடந்தது என்ன?

KN Nehru: கே.என்.நேருவுக்கு சுத்துப்போட்ட முதல்வர் விஜய்.! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! நடந்தது என்ன?

KN Nehru Case: நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 05 2026, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்​சம் ரூபாய் வரை லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மூன்று கடிதம் அனுப்பியிருந்தது. அதில் இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : F/KN Nehru

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 20ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!

Related Articles

Related image1
SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!
Related image2
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
35
Image Credit : Asianet News

அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன. இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால் அனைத்து வழக்குகளும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

45
Image Credit : istock

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

55
Image Credit : our own

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் விசாரணை இம்மாத இறுதியில் விசாரணைக்கு உள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது' என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையில் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிறருக்கு எதிராக ஜூன் 23 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கூறியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு அரசு
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!
Recommended image2
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!
Recommended image3
Now Playing
Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
Related Stories
Recommended image1
SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!
Recommended image2
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved