MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!

SSLC Mark Sheet Corrections: 10-வது மதிப்பெண் சான்றிதழில் பிழையா? திருத்தம் செய்வது எப்படி? அரசு தேர்வுகள் முக்கிய அப்டேட்!

SSLC Mark Sheet Corrections: மார்ச் 2026 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி பள்ளியின் பெயர் மற்றும் மாணவனது புகைப்படம் போன்றவற்றில் திருத்தங்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 05 2026, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்
Image Credit : Asianet News

எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துக்களான க் ஷ மற்றும் ஸ்ரீ திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அரசுத் தேர்வுகள் இயக்கம்
Image Credit : Google

அரசுத் தேர்வுகள் இயக்கம்

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்: மார்ச் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி, மொழிப்பாடம், பள்ளியின் பெயர் மற்றும் மாணவனது புகைப்படம் போன்றவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்கள் ஜூன் 03 முதல் 10 வரையிலான நாட்களில் தங்களுக்கான User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி www.dgeapp.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
Related image2
12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!
35
பள்ளி தலைமை ஆசிரியர்கள்
Image Credit : ANI

பள்ளி தலைமை ஆசிரியர்கள்

அதன் தொடர்ச்சியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து திருத்தங்கள் கோரி பெறப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பள்ளியின் பெயரில் திருத்தங்கள் இருப்பின், அதனை அப்பள்ளியின் User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தியே திருத்தங்கள் மேற்கொள்ள இயலும் என்பதால், உதவி இயக்குநர்கள் திருத்தங்கள் கோரும் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அவர்களது பள்ளியின் User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஜூன் 10ம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்து முடித்திட அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

45
வடமொழி எழுத்துக்கள்
Image Credit : Asianet News

வடமொழி எழுத்துக்கள்

மேலும், மார்ச் 2026 பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் கீழ்க்காண் திருத்தங்கள் இருப்பின் பள்ளி மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துக்களான க் ஷ திருத்தங்கள், தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி, பெற்றோர் பெயர், பயிற்று மொழி மற்றும் புகைப்பட திருத்தங்கள் அவற்றினை உதவி இயக்குநர்கள் மேற்கண்டவாறு வகைப்படுத்தி, தனித்தனி முகப்பு கடிதத்துடன் திருத்தங்கள் கோரும் தேர்வரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலினை இணைத்து பட்டியலிட்டு, ஜூன் 15க்குள் தலைமை அலுவலகத்தில் கிடைத்திடுமாறு துணை இயக்குநர் (இடைநிலை) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு விரைவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

55
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Image Credit : ANI

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

மேலும் ஸ்ரீ" என்ற எழுத்து இடம்பெறக்கூடிய பெயரோ அல்லது முகப்பெழுத்தோ உள்ள தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஸ்ரீ என்ற எழுத்திற்கு பதில் ரீ என இடம் பெற்றிருந்தால், அவற்றினை உதவி இயக்குநர்கள் தங்கள் அலுவலக User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஸ்ரீ- என இடம்பெற்ற பெயரை முழுவதுமாக நீக்கிவிட்டு புதிதாக அப்பெயரினை Type செய்து பதிவேற்றம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!
Recommended image2
Now Playing
Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
Recommended image3
Now Playing
"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
Related Stories
Recommended image1
Rain: ஆறு நாட்களுக்கு அலறப்போகும் தமிழகம்! கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்!
Recommended image2
12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved