MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!

12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!

school education department: மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 04 2026, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 அரசு தேர்வுகள் இயக்குநர்
Image Credit : Google

அரசு தேர்வுகள் இயக்குநர்

மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேல்நிலை பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரியவருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருத்தங்களை செய்ய இறுதி வாய்ப்பு
Image Credit : Asianet News

திருத்தங்களை செய்ய இறுதி வாய்ப்பு

எனவே தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மேல்நிலை பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம் / தமிழ்) பிறந்ததேதி, புகைப்படம், பயிற்றுமொழி (Medium of Instructions) மொழிப்பாடம் (First Language) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Related image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
35
அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்
Image Credit : Google

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

45
ஜூன் 8ம் தேதி கடைசி நாள்
Image Credit : Google

ஜூன் 8ம் தேதி கடைசி நாள்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் தலைமை ஆசிரியர் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அதனை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 08.06.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

55
மதிப்பெண் சான்றிதழ்
Image Credit : our own

மதிப்பெண் சான்றிதழ்

தேர்வர்களது நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது. எனவே புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து சுற்றறிக்கை அனுப்புமாறும். இப்பணிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Recommended image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
Recommended image3
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Recommended image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved