MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?

Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?

Tamilnadu Rain: தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்க வாய்ப்புள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 04 2026, 07:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்
Image Credit : ANI

நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதம் அடித்து வருகிறது. காலை 7 மணி முதலே வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வெயில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் 100 டிகிரி மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.54 டிகிரியும், திருத்தணியில் 102.56, கடலூரில் 102.38, மதுரை நகரம் மற்றும் தொண்டியில் 101.84, மதுரை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 101.12, வேலூரில் 100.76, பரங்கிப்பேட்டையில்100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கன்னியாகுமரி மிக கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கன்னியாகுமரி மிக கனமழை எச்சரிக்கை

அதாவது தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்க வாய்ப்புள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Related image2
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
36
நாளை மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்
Image Credit : our own

நாளை மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

46
ஜூன் 7ம் தேதி
Image Credit : Asianet News

ஜூன் 7ம் தேதி

மேலும் ஜூன் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

56
ஜூன் 8ம் தேதி
Image Credit : Asianet News

ஜூன் 8ம் தேதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

66
இன்று சென்னையில் இடி மின்னலுடன் மழை
Image Credit : our own

இன்று சென்னையில் இடி மின்னலுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெப்ப அலை
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கோடைக்காலம்
மழை செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Recommended image2
Now Playing
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS
Recommended image3
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved