MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்

Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்

Kerala Crime News: திருவனந்தபுரத்தில், ஒன்றரை வயது குழந்தை அதன் தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 03 2026, 08:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாடகை வீட்டில்
Image Credit : Asianet News

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாடகை வீட்டில்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அடுத்துள்ள பனவூரைச் சேர்ந்​தவர் அகிலா (24). இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த போது கணவர் அகில் இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு தற்​கொலை செய்து கொண்டார். அவருக்கு அர்ஷித் என்ற மகன் பிறந்துள்ளான். தற்போது குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் நிலையில், அஷ்கர் (31) என்ற என்ற நபருடன் அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குழந்தை கைகளிலும் எலும்பு முறிவு
Image Credit : X

குழந்தை கைகளிலும் எலும்பு முறிவு

இந்நிலையில் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தை அர்​ஷத் இடையூறாக இருந்​துள்ளது. இதன்​ காரண​மாக வளர்ப்பு தந்தை அஸ்​கர், குழந்​தையை அடிக்​கடி அடித்து உதைத்து துன்​புறுத்தி வந்​துள்​ளார். கொடூரத்தின் உச்சிக்கே சென்ற அஷ்கர் குழந்​தை​யின் உடலில் சிகரெட்​டால் சூடு வைத்​துள்ளார். ஆனால் இந்த சம்பவம் தாயின் கண்முன்னே நடந்தும் கண்​டிக்​க​வில்​லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த மறைந்த அகிலின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Related image2
கோவை சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.! குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்!
35
உயிரிழந்த குழந்தை
Image Credit : Asianet News

உயிரிழந்த குழந்தை

கடந்த 29ம் தேதி அகிலா ஒரு நடன நிகழ்ச்சிக்காக வெளியூருக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை அர்ஷித்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்​தில் உள்ள எஸ்​ஏடி மருத்​து​வ​மனைக்கு குழந்​தையை ஆம்​புலன்​ஸில் கொண்டு சென்​றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்​து​வர்​கள் வழி​யிலேயே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரிவித்தனர்.

45
 குழந்​தை​யின் உடலில் பல்​வேறு காயம்
Image Credit : Asianet News

குழந்​தை​யின் உடலில் பல்​வேறு காயம்

இதனிடையே குழந்​தை​யின் உடலில் பல்​வேறு இடங்​களில் காயம் இருந்ததால் சந்​தேகமடைந்த மருத்துவர்கள் போலீ​சாருக்கு தகவல் தெரி​வித்​தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்​தை​யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

55
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
Image Credit : ANI

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

பிரேத பரிசோதனையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குழந்தையின் விலா எலும்பில் 7 இடங்களில் முறிவு உட்பட உடலில் 91 காயங்கள் உள்ளதாகவும், மேலும் மூளை மற்றும் மார்பு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டதே காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். குழந்​தையை காப்பாற்றாத தாய் அகிலா​வை​யும் போலீ​சார் கைது செய்​தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
கொலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image2
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Recommended image3
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Related Stories
Recommended image1
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image2
கோவை சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.! குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved