ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?
சீனா அதிபர் ஜி ஜின்பிங் தற்போது ராணுவத்தின் மூலமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவை விட்டு எங்கும் வெளியே செல்லாமல் இருந்து வந்த அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற SCO மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்று திரும்பியது முதல் இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
இதனால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற தலைவர்கள் மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகச் சீனாவிலிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ராணுவத்தின் ஒட்டுமொத்த உயர் கட்டளையகமாக உள்ள, சக்திவாய்ந்த மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) தலைவர் மற்றும் அதிபர் பதவி என சீனா அதிபர் ஜி ஜின்பிங் 3 முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”
மாவோ சேதுங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார் ஜி ஜின்பிங். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த, மாசேதுங்குவின் நண்பர் ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகன்தான் ஜின்பிங். சீனாவின் தொழில்கள் மற்றும் வணிக வங்கி ஐ.சி.பி.சி உலகிலேயே மிகப் பெரிய வங்கிகளில் ஒன்று. டென்ஸன்ட் நிறுவனம், கணினி விளையாட்டு மென்பொருள்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.
சைனா சதர்ன் உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனம். உலகிலேயே சாம்சங் நிறுவனத்துக்குப் பிறகு, அதிக செல்போன்களை விற்கும் வாவே, உபெரின் போட்டி நிறுவனமான டிடி மற்றும் அலிபாபா நிறுவனம் என இவரின் ஆட்சிக்காலம் சீனாவின் பொற்காலமாக இருந்தது என்றே கூறலாம். அதிபர் பதவி கால சட்டத்தை மாற்றி அமைத்தது, ஒரு குழந்தைச் சட்டத்தை நீக்கியது, ஜீரோ கொரோனா நவடிக்கை என பல்வேறு அதிரடியை கொண்டுவந்தார்.சீனப் பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கை, அண்டைநாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகளில் மிகக் கடுமையான போக்கைக் கடைபிடித்தார்.
ஹாங்காங் போராட்டம் போன்ற உள்நாட்டில் நடக்கும் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். சீன ஆட்சியாளர்களில் சர்வதிகாரமிக்க தலைவராக உருவெடுத்தார். சீன அரசியல் சாசனப்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவிவகிக்க முடியும். ஆனால், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் அந்த விதி நீக்கப்பட்டது. அப்போதே, இந்தச் சட்டத் திருத்தம் ஜி ஜின்பிங் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடாகவே கருதப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
அதேபோல, 68 வயதுக்கு மேலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்பது விதி. ஆனால், அப்போது 68 வயதாகி இருந்த ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக, நாட்டின் அதிபராக மூன்று முக்கிய அதிகாரபீடங்களில் தொடர்கிறார். உலகின் மிகப்பெரிய நாட்டின், கிட்டத்தட்ட மக்கள் தொகையில், பொருளாதார வளர்ச்சியில், சமூக கட்டமைப்பில், பாதுகாப்பில் என எல்லாவற்றிலும் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட அதிபர் தற்போது ராணுவத்தின் மூலமாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அதிபரின் பதவியை பறிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும், இந்த தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டு சிறையில் ஜின்பிங் உள்ளார் என்று இதுவரை உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.
மேலும் செய்திகளுக்கு..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?