MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • அணு ஆயுதப் போரே வந்தாலும் தப்பிக்கலாம்.. உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள்.. முழு லிஸ்ட்!

அணு ஆயுதப் போரே வந்தாலும் தப்பிக்கலாம்.. உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள்.. முழு லிஸ்ட்!

Top 10 Safest Countries: வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் எழுந்துள்ள நிலையில், உலகில் பாதுகாப்பான நாடுகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 02 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உலகத்தில் போர்ப்பதற்றம்
Image Credit : Google

உலகத்தில் போர்ப்பதற்றம்

உலகம் இப்போதும் பெரும் போர் பதற்றத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்கி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலையும், குவைத், சவுதி அரேபியா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை தாக்கி வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

மூன்றாம் உலகப்போர் மூண்டு விடுவோமோ என பல்வேறு நாடுகளின் மக்கள் அச்சத்தில் உறைந்து வரும் நிலையில், உலகப்போர் வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத பாதுகாப்பான நாடுகள் உலகில் உள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்ப்பொம்.

24
சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர்
Image Credit : x

சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர்

உலகில் பாதுகாப்பான புகலிடங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் விளங்கி வருகின்றன. இந்த நாடுகளின் விரிவான மலைப்பிரதேசங்கள் போர் ஏற்பட்டால் அணுஆயுத தாக்குதலில் இருந்து குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகின்றன. குறிப்பாக சுவிட்சர்லாந்து எந்த போரிலும் பங்கேற்காத கொள்கையை கொண்டுள்ளது.

Related Articles

Related image1
உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!
Related image2
ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு என்ன ஆச்சு? பரவும் அதிர்ச்சி தகவல்
34
ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
Image Credit : x

ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா

இந்த நாடுகள் பிரதான நிலப்பரப்பில் இருந்து தொலைவில் இருப்பதால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளன. இதேபோல் தென் அமெரிக்காவில் உள்ள சிலி, உருகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளும் போர் ஏற்பட்டால் பாதுகாப்பான புகலிடங்களாக இருக்கும். இந்த நாடுகள் சுய சார்பு விவசாயம் செய்து முக்கிய உணவு ஏற்றுமதியாளர்களாகவும் உள்ளதால் போரினால் இங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

44
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா கண்டங்கள்
Image Credit : x

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா கண்டங்கள்

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா ஆகியவை உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள். பெரிய மற்றும் அசாதாரண நிலப்பரப்பு காரணமாக இந்த பனி பிரதேசங்களில் அனு ஆயுதம் நுழைய முடியாது.

ஆங்கிலசி

ஆங்கிலசி வடமேற்கு வேல்ஸின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு. இது மெனாய் ஜலசந்தியால் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அழகான கடற்கரைகள் மற்றும் பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு பெயர் பெற்ற ஆங்கிலசி மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

கார்ன்வால்

இங்கிலாந்தின் தென்மேற்கு முனையில் உள்ல கரடுமுரடான பகுதிகள் நிறைந்த கடற்கரைகளால் ஆன மிகவும் கிராமப்புறப் பகுதி தான் கார்ன்வால். இங்குள்ள கடற்கரையோரம் செங்குத்தான பாறைகள் மற்றும் தெற்கே, ஃபால் மற்றும் ஃபோவே நதிகளின் முகத்துவாரங்களில் உள்ளன. இங்கு அணுஆயுதம் நுழைய முடியாது என்று சொல்லப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகப் போர்
ஈரான்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Price: அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு..?
Recommended image2
ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு என்ன ஆச்சு? பரவும் அதிர்ச்சி தகவல்
Recommended image3
பாகிஸ்தான் - ஆப்கன் மோதல்: ஆபரேஷன் கசாப் லில் ஹக், 133 பேர் பலி
Related Stories
Recommended image1
உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!
Recommended image2
ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு என்ன ஆச்சு? பரவும் அதிர்ச்சி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved