MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!

உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம்.. 52 டன் தங்கம்.. தனி விமான நிலையம்.. வியக்க வைக்கும் தகவல்!

உலகின் நம்பர் 1 தங்கச்சுரங்கம் 52 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த தங்க சுரங்கத்துக்கு தனி விமான நிலையமும் உள்ளது. வியக்க வைக்கும் இந்த சுரங்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 08 2026, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
உலகின் பணக்கார தங்கச்சுரங்கம்
Image Credit : x

உலகின் பணக்கார தங்கச்சுரங்கம்

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார தங்கச் சுரங்கமான (Gold Mine)  இந்தேனேசியா நாட்டில் உள்ள கிராஸ்பெர்க் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் அமைந்துள்ள இந்த தங்கச்சுரங்கம் ஆண்டுதோறும் சுமார் 48 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த சுரங்கம் தங்கத்துடன் சேர்ந்து, இது உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

22
தனி விமான நிலையம்
Image Credit : GOOGLE

தனி விமான நிலையம்

கிராஸ்பெர்க் சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தாதுவில் அதிக அளவு தங்கம் மற்றும் தாமிரம் இரண்டும் உள்ளன. புன்காக் ஜெயா அருகே அமைந்துள்ள கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கம் பப்புவாவின் மிக உயரமான மலையாகும். இந்த முழுப் பகுதியும் டெக்டோனிக் தகடுகளின் மாற்றத்தால் உருவாக்கப்பட்டதும் கனிம வைப்புகளால் நிறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கத்திலிருந்து கணிசமான அளவு தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமான சுரங்கத்தில் சுமார் 20,000 பேர் பணிபுரிகின்றனர். 

இந்த தங்கச் சுரங்கத்துக்கு என்று தனியாக விமான நிலையம் அமைந்துள்ளது. ஒரு துறைமுகம் கூட உள்ளது. மேலும் குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான மருத்துவமனைகளும் உள்ளன.

52 டன் தங்கம் உற்பத்தி

கிராஸ்பெர்க் தங்கசுரங்க வரலாற்றை புரட்டி பார்த்தால் 1936ம் ஆண்டு டச்சு புவியியலாளர் ஜீன் ஜாக்ஸ் டோசி என்பவரால் இங்குள்ள கனிம வளங்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டன. 1960ம் ஆண்டுகளில் ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் என்ற நிறுவனம் இங்கு தங்கம் எடுக்க உரிமம் பெற்ற பிறகு இந்த சுரங்கம் விரிவடைந்து வருகிறது. 2023ம் ஆண்டில் மட்டும் இந்த தங்கச் சுரங்கம் 52.9 டன் (1.7 மில்லியன் அவுன்ஸ்) தங்கம், 680,000 டன் தாமிரம் மற்றும் 190 டன் வெள்ளியை உற்பத்தி செய்துள்ளது.

Related Articles

Related image1
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
Related image2
பணம் செல்லாமல் போகும், தங்கம் விலை உச்சம் தொடும்.! பொருளாதாரத்தில் புயல் வீசும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்கச் சுரங்கம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயிலில் போர்டிங் ஸ்டேஷனை இப்படியும் மாற்றலாமா? சார்ட் போடுறதுக்கு முன்னாடி இதை செஞ்சிடுங்க!..
Recommended image2
ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகள் இனி ஏடிஎம்மில் வரப்போகுது.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Recommended image3
சாக்லேட் விலையை விட கம்மி.. 55 பைசாவிற்கு டீசல் விற்கும் நாடு.. பெட்ரோல் விலை 2 ரூபாய் தான்!
Related Stories
Recommended image1
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
Recommended image2
பணம் செல்லாமல் போகும், தங்கம் விலை உச்சம் தொடும்.! பொருளாதாரத்தில் புயல் வீசும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved