போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.. நெல்லை மினி மராத்தான் போட்டி..
உலக இருதய தினம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, நெல்லையில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க:15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய மாரத்தான ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை, ஆட்சியர் மாளிகை, சேவியர் கல்லூரி, ஆயுதப்படை சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவு பெற்றது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். பின்னர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.