15 கடைகளில் குல்லா, மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையன்.. சிசிடிவி காட்சி உள்ளே
உதகையில் நள்ளிரவில் பட்டாகத்தி மற்றும் ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர், 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்.
நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் உள்ள நகராட்சி சந்தையில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 15 க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இன்று அதிகாலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்த வியாபாரிகள், பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மொத்தமாக 15 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து , விரைந்த வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தில், மர்மநபர் ஒருவன் முகமூடி அணிந்து, கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலுன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஏதேனும் கும்பல் ஈடுபட்டதா எனும் கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.