இந்நாளில் எஸ்பிபி குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களின் சில தொகுப்புகளை காணலாம்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழில் எண்ணில் அடங்காத பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். காற்றெங்கும் எஸ்பிபியின் குரல் தான் என்னும் அளவிற்கு இவரது பாடல்கள் எங்கும் நிரம்பி வழிகின்றன. தாலாட்டு முதல் சோகம் என எஸ்பிபியின் குரலில் ஆயிரக்கணக்கான பாடல்கள் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவை ஆகவே இருக்கின்றன. புகழின் உச்சத்தில் இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அப்போது அவருக்கு வயது 74. இன்று அவரது நினைவு நாள். இந்நாளில் எஸ்பிபி குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களின் சில தொகுப்புகளை காணலாம்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் கமலஹாசன் பாடுவதாக வரும் 'கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடல் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகவே இருக்கிறது. அந்தப் பாடலில் விலங்குகள் பறவைகள் என பல குரல்கள் இடம் பிடித்த போதிலும் எஸ்பிபியின் குரல் மட்டும் தனித்துவம் வாய்ந்ததாக மனதைக் கவர்ந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் பெற்ற பிரபலங்கள்... அதிக சம்பளம் யாருக்கு?- முழு விவரம் இதோ

டிஸ்கோ பாடலாக அன்றைய இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த "எங்கேயும் எப்போதும்" பாடலில் உலகம் சுற்றும் வாலிபனாய் தனது குரலில் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார் எஸ்பிபி. இந்த படம் நினைத்தாலே இனிக்கும்.
இதையும் படியுங்கள்... அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக... அடுத்தடுத்து வெளியான வாரிசு படத்தின் அதகளமான அப்டேட்டுகள் இதோ

டப்பாங்குத்து பாடலையும் விட்டு வைக்காத எஸ்பிபி வா மச்சான் பாடலை சென்னை தமிழில் பாடி அசத்தியிருந்தார். வண்டி சக்கரம் படத்தில் இடம்பெற்றிருந்த இந்த பாடல் சென்னை வாசிகள் இடையே மிகப் பிரபலம்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது இந்த பாடல் இன்றளவும் கிராமப்புற பேருந்துகளில் ஒலிக்கக் கூடிய பாடலாகும். எஸ்பிபி லிஸ்டில் முதல் வரிசையில் உள்ள இந்த பாடல் இளையராஜா இசையமைப்பில் அமைந்திருந்தது. நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றிருந்தது இந்த பாடல்.

உணர்ச்சிகள் பொங்கும் இளஞ்சோலை பூத்ததம்மா பாடல் ஹிந்துஸ்தானியராகமான மதுவந்தியில்அமைந்திருந்தது. எஸ்பிபியின் மெல்லிய குரலில் காதுகளை சுவையால் நிரப்பியது இந்த பாடல் இது உனக்காகவே வாழ்கிறேன் பாடத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

"மண்ணில் இந்த காதல் இன்றி" இந்த பாடல் புறக்கணிக்க இயலாத ஒன்றாகும். சரணம் பாடும் போது மூச்சு விடாமல் எஸ்பிபி பாடி இருப்பார். இளையராஜா மெட்டுக்களில் கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்றது இந்த பாடல்.
;
வந்தேன்டா பால்காரன் பல தலைமுறைகளை கடந்து நிலைத்து நிற்கும் இந்த பாடல் தான் ரஜினிகாந்த் படங்களில் முதலிடம் பெற்றது.

"என் காதலே என் காதலே" என மனங்களை உருக வைத்த எஸ் பி பியி ன் குரலில் அமைந்த டூயட் பட சாங்கை யாரும் மறந்திருக்க முடியாது. இன்றளவும் ஒரு தலை காதலர்களுக்கு இந்த பாடல் ஒரு கீதமாகவே அமைந்திருக்கிறது.

ஜானகி உடன் எஸ்பிபி இணைந்து பாடிய மலரே மௌனமா பாடல் கிளாசிக்கல் பாடலில் முதலிடத்தில் பிடித்திருக்கிறது.

2021ல் வெளியான நந்தா படத்தில் இடம்பெற்ற முன் பனியா பாடல் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அடுத்த தலைமுறை ரசிகர்களுக்காக எஸ் பிபி- யால் படைக்கப்பட்டதாகும்.

