அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக... அடுத்தடுத்து வெளியான வாரிசு படத்தின் அதகளமான அப்டேட்டுகள் இதோ
துணிவு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு போட்டியாக வாரிசு படக்குழுவும் அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதனிடையே அஜித் நடித்துள்ள துணிவு படமும் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளரும், அஜித் ரசிகருமான ஆர்.கே.சுரேஷ் நேற்று போட்ட டுவிட் தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக துணிவு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டன.
இதையும் படியுங்கள்... 'இந்தியன் 2' படத்திற்காக களரி பயிற்சியில் ஈடுபட்ட காஜல் அகர்வால்! உடலை வில்லாக வளைத்து மாஸ் காட்டும் வீடியோ!
இந்நிலையில், அதற்கு போட்டியாக தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படக்குழுவும் வரிசையாக அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 சண்டைக் காட்சிகள் மற்றும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அத்துடன் ஷூட்டிங் முடிவடைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் வாரிசு படக்குழு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே அஜித் - விஜய் ரசிகர்கள் துணிவு மற்றும் வாரிசு படங்களை வைத்து போஸ்டர் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது படக்குழுவும் போட்டி போட்டு அப்டேட் வெளியிட்டு வருவது பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட படங்கள் இத்தனை இருக்கா...! தடைக்கான காரணம் என்ன?... முழு விவரம் இதோ