MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட படங்கள் இத்தனை இருக்கா...! தடைக்கான காரணம் என்ன?... முழு விவரம் இதோ

தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட படங்கள் இத்தனை இருக்கா...! தடைக்கான காரணம் என்ன?... முழு விவரம் இதோ

தமிழக அரசு ஒரு சில படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதித்தது. அவை என்னென்ன படங்கள்? அந்த படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 25 2022, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்திருந்த தமிழ் சினிமா, தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. வார வாரம் படங்கள் ரிலீசாகிக் கொண்டு தான் இருக்கின்றன. பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வருகின்றன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான படங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஒருவேளை படம் மிகவும் பிடித்தால் திரும்ப திரும்ப பார்த்து கொண்டாடுகிறார்கள். அந்த அளவுக்கு சினிமா மீதான மோகம் அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் இந்த அளவுக்கு சினிமாவை கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு ஒரு சில படங்களை பார்க்கக்கூடாதுனு சொல்லி தடை போட்டிருக்கு. அவை என்னென்ன படங்கள்? அந்த படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

27

ஒரே ஒரு கிராமத்திலே

இந்த படம் 1987-ல் எடுக்கப்பட்டது. இப்படத்தில் லட்சுமி, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சாதியைப் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் அதிகமாக பேசப்பட்டதனால், இப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக அரசு தடை செய்தது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்ற படக்குழு, படத்தை வெளியிட அனுமதி வாங்கியது.

37

தி டாவின்சி கோட்

தமிழ்நாட்டில் எப்போதுமே ஆங்கில படங்களுக்கும் அதிக மவுசு இருக்கும். அந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த தி டாவின்சி கோட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாதுனு சொல்லி தடை செய்யப்பட்டது. ஒரு சில மதங்களை புண்படுத்தும் வகையில் இருந்ததால் இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.

47

டேம் 999

2011-ல் வெளிவர இருந்த படம் டேம் 999. இந்த படத்தை ஷோபன் ராய் என்பவர் இயக்கி இருந்தார். தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணையை பற்றி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வெளியானால் தமிழ் மக்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாதுனு சொல்லி தமிழக அரசு தடை விதித்தது.

இதையும் படியுங்கள்... நான் மட்டும் நடிக்க வரலேன்னா... அந்த தொழில்ல இறங்கிருப்பேன் - நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்

57

விஸ்வரூபம்

கமல் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீசாக இருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முதலில் தடை விதித்து இருந்தது தமிழக அரசு. இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. பின்னர் சென்சாரில் ஒரு சில சீன்களை கட் பண்ணிய பிறகு தான் இப்படம் ரிலீஸ் ஆனது.

67

மெட்ராஸ் காஃபே

இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்த படம் மெட்ராஸ் காஃபே. 2013-ல் இந்தியாவில் ரிலீசான இப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த தமிழ் ஈழ விடுதலைப் போரைப்பற்றிய படமாகும். இதில் விடுதலைப்புலிகளை தவறாக சித்தரித்ததன் காரணமாக தமிழ் நாட்டில் போராட்டம் வெடித்தது. இதனால் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தமிழக அரசு தடை விதித்தது.

77

இனம்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014-ல் வெளிவர இருந்த படம் இனம். இது இலங்கையில் நடந்த போரைப்பற்றிய படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஒரு சில காரணங்களால் இப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... விக்ரம் தந்த மவுசால் சம்பளத்தை சரமாரியாக உயர்த்தி... இந்தியன் 2 மூலம் நம்பர் 1 இடத்தை பிடித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved