MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

உகாதி பண்டிகை மார்ச் 19ந் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 18 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
யூத்
Image Credit : X

யூத்

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள 'யூத்' படம் வரும் மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கென் கருணாஸே கதை எழுதியுள்ள இந்த ஸ்கூல்-டீனேஜ் ரொமான்டிக் காமெடி படத்தை, பர்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் தயாரித்துள்ளனர். இதில் ஆச்சரியமூட்டும் விதமாக, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது கென் கருணாஸின் அப்பாவாக நடித்துள்ளார். பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் தேவதர்ஷினி சேத்தன், பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

25
துரந்தர் 2
Image Credit : Instagram

துரந்தர் 2

இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த படம் 'துரந்தர்'. அதில் ஹம்சா என்ற கேரக்டரில் ரன்வீர் சிங் மிரட்டியிருந்தார். இந்தப் படம் இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பெரிய அளவில் பேசப்பட்டது. ரொம்ப நாளைக்குப் பிறகு, 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த பாலிவுட் படம் என்ற பெருமையை இந்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பெற்றது. முதல் பாகம் கொடுத்த அந்த பிரம்மாண்ட அனுபவம்தான், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி, அதாவது நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. ஆதித்ய தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங்குடன் அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், அக்‌ஷய் கண்ணா, சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Articles

Related image1
This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Related image2
தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்... எப்போ வெளியாகிறது தெரியுமா?
35
உஸ்தாத் பகத் சிங்
Image Credit : instagram

உஸ்தாத் பகத் சிங்

பவர் ஸ்டார் பவன் கல்யாண், 'உஸ்தாத் பகத் சிங்' படத்துடன் வருகிறார். மார்ச் 19-ம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் பெரிய ஹைப் இல்லை என்றாலும், இப்போது பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கத் தயாராகிவிட்டது.

45
ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்

இந்த வாரம் ஓடிடியில் அர்ஜுன் இயக்கிய சீதா பயணம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 19-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர மற்றுமொரு தமிழ் படமும் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. ஆரி அர்ஜுனன் நடிப்பில் உருவாகி உள்ள ஃபோர்த் புளோர் என்கிற த்ரில்லர் திரைப்படம் வருகிற மார்ச் 20ந் தேதி ஓடிடிக்கு வருகிறது. இப்படமும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

55
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்
Image Credit : Youtube

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்

லேண்ட் லார்டு என்கிற கன்னட படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. பியூட்டி இன் பிளாக் என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகின்றது. இவையெல்லாம் மார்ச் 19ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுதவிர மார்ச் 20ந் தேதி, காசர்கோட் எம்பஸி என்கிற மலையாள வெப் தொடர் ஜீ5 ஓடிடிக்கு வருகிறது. பார்டர் 2 படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. சிரயா என்கிற இந்தி படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ஏஜெண்ட் ஜீட்டா என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமானை கழட்டிவிட்ட மணிரத்னம்... இசைப்புயலுக்கு பதில் அவரின் சாய்ஸ் யார் தெரியுமா?
Recommended image2
கோமதி உடன் செம சண்டை... வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image3
ஜனனி - சக்தியை ஜோடியாக சிறைபிடித்தாரா தேவசகாயம்? எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image2
தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்... எப்போ வெளியாகிறது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved