MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்... எப்போ வெளியாகிறது தெரியுமா?

தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்... எப்போ வெளியாகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் வெளியாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thaai Kizhavi OTT Release Date
Image Credit : X

Thaai Kizhavi OTT Release Date

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 27ந் தேதி திரைக்கு வந்த படம் தாய் கிழவி. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் பவுனுத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்தார். இப்படத்தை சிவக்குமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். நிவாஷ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தாய் கிழவி வசூல்
Image Credit : X

தாய் கிழவி வசூல்

தாய் கிழவி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. நேற்று கூட இப்படம் இந்தியாவில் 1 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்துக்கு ஈடு கொடுக்க வேறு எந்த பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகாததால், தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

34
சாதனை படைத்த தாய் கிழவி
Image Credit : X

சாதனை படைத்த தாய் கிழவி

தாய் கிழவி திரைப்படம் தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டி உள்ளது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில், தமிழ்நாட்டில் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் படம் என்கிற பெருமையையும் தாய் கிழவி பெற்றுள்ளது. இப்படம் இன்னும் 2 கோடி வசூலித்தால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை படைக்கும். தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் 57 கோடி உடன் முதலிடத்தில் உள்ளது. தாய் கிழவி படம் இதுவரை 55 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

44
ஓடிடி ரிலீஸ் எப்போது?
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. பொதுவாக தமிழ் படங்கள் வெளியான 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடும், அதன்படி பார்த்தால் இப்படம் இம்மாதம் 26-ந் தேதி ஓடிடிக்கு வர வாய்ப்பு உள்ளது. ஆனால் படம் தியேட்டரில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருவதால், அதன் ஓடிடி ரிலீஸ் ஏப்ரல் முதல் வாரத்திற்கும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் படக்குழுவே தாய்கிழவி ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
Recommended image3
Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Related Stories
Recommended image1
தியேட்டரில் வராத 'தாய் கிழவி' பட காட்சிகள்! சென்டிமெண்டும், சுவாரஸ்யமும் நிறைந்த கண்ணீர் வரவழைக்கும் சீன்!
Recommended image2
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved