பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் தாய் கிழவி திரைப்படம் 10 நாட்களிலேயே மாபெரும் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

Thaai Kizhavi Box Office Record
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் லேட்டஸ்டாக திரைக்கு வந்த படம் தாய் கிழவி. இப்படத்தை சிவக்குமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே கடைசி விவசாயி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். இதுதவிர ரியோ நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதும் இவர்தான். இவர் இயக்கிய முதல் படம் தாய் கிழவி.
ஹிட் அடித்த தாய் கிழவி
தாய் கிழவி திரைப்படத்திற்கு முதுகெலும்பாக இருந்தது ராதிகா சரத்குமார் தான். அவர் பவுனுத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதைவிட வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அவரின் கதாபாத்திரத்தோடு சேர்ந்து பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் செய்துள்ள காமெடி கலாட்டா திரையரங்குகளை சிரிப்பலைகளால் நிரப்பி உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக குடும்பப் பாங்கான கமர்ஷியல் படங்களுக்காக ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் பக்கா ட்ரீட் ஆக அமைத்திருந்தது. இதனால் தியேட்டர்களிலும் அப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.
வசூல் வேட்டையாடும் தாய் கிழவி
தாய் கிழவி திரைப்படம் பிப்ரவரி 27-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையாடியது. அதற்கு முதல் காரணம் இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த புரமோஷன் தான். படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டபோதே ஏராளமான திரைப்பிரபலங்கள் இப்படத்தை பார்த்து சிலாகித்து பேசினர். இதனால் முதல் நாளே வசூல் வேட்டையை தொடங்கியது தாய் கிழவி. இப்படம் திரைக்கு வந்த மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூலை நெருங்கியது. இந்த நிலையில், இப்படம் 10 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
தாய் கிழவி சாதனை
அதன்படி தாய் கிழவி திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதன்மூலம் பிப்ரவரி மாதம் வெளியான படங்களில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை தாய் கிழவி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக வித் லவ் திரைப்படம் 35 கோடி வசூல் உடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தாய் கிழவி அதை ஓவர்டேக் செய்துள்ளது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு அடுத்தபடியாக தாய் கிழவி அதிக வசூல் செய்த படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

