MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வித் லவ் முதல் தாய் கிழவி வரை... பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ

வித் லவ் முதல் தாய் கிழவி வரை... பிப்ரவரியில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ

பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக் குவித்த டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வித் லவ், தாய் கிழவி போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Highest Grossing Tamil Movies
Image Credit : X

Top 5 Highest Grossing Tamil Movies

2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஜனவரி மாதம் ஏமாற்றம் அளித்த நிலையில், பிப்ரவரி மாதம் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்தை விட மிக மோசமான ஒன்றாக பிப்ரவரி அமைந்துள்ளது. பிப்ரவரியில் பெரிய படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. அனைத்துமே சிறு பட்ஜெட் படங்கள் தான். இது போதாதென்று எக்கச் சக்கமான படங்களை போட்டி போட்டு ரீ-ரிலீஸ் செய்தனர். இதனால் புதுப் படங்கள் போதியளவில் தியேட்டர்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலை உருவானது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்களையும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தையும் பார்க்கலாம்.

26
5. பூக்கி
Image Credit : X

5. பூக்கி

விஜய் ஆண்டனி தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் காதலர் தின விருந்தாக திரைக்கு வந்த படம் பூக்கி. அப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டாலும் போதிய அளவிலான தியேட்டர்கள் கிடைக்காததால் பூக்கி படம் பிளாப் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.1.37 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.

Related Articles

Related image1
காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Related image2
With Love: 10 நாளில் 5 மடங்கு லாபம்.. 'வித் லவ்' செய்த மேஜிக்.. அடேங்கப்பா! இத்தனை கோடிகள் வசூலா?
36
4. சீதா பயணம்
Image Credit : Asianet News

4. சீதா பயணம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கிய படம் சீதா பயணம். இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக திரைக்கு வந்த இப்படம் வந்த வேகத்தில் வாஷ் அவுட் ஆனது. இப்படம் உலகளவில் ரூ.1.73 கோடி வசூலித்துள்ளது.

46
3. மை லார்ட்
Image Credit : X

3. மை லார்ட்

பிப்ரவரி மாதத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் மை லார்ட். இப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சசி குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் பாசிடிவ் ரிவ்யூ வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.2.91 கோடி மட்டுமே வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.

56
2. தாய் கிழவி
Image Credit : X

2. தாய் கிழவி

பிப்ரவரி மாதத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்த படம் தான் தாய் கிழவி. பிப்ரவரி 27-ந் தேதி திரைக்கு வந்த இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களே ஆகும் நிலையில், உலகளவில் ரூ.18.6 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

66
1. வித் லவ்
Image Credit : X

1. வித் லவ்

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி திரைக்கு வந்த படம் வித் லவ். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருந்தார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி, பிப்ரவரி மாதத்தில் அதிக வசூல் அள்ளிய படமாக மாறியது. இப்படம் உலகளவில் ரூ.38.19 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியாவின் கார்... டயர் பஞ்சரானதால் பறிபோன உயிர்..!
Recommended image2
"அந்திமழை மேகம்" பாடலுக்குள் இத்தனை சங்கதியா.! பாட்டை கேட்டதும் கமல், இளையராஜாவை அனைத்து முத்தமிட்ட கதை தெரியுமா உங்களுக்கு?!
Recommended image3
கருப்புக்கு முன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா
Related Stories
Recommended image1
காதலர் தின விருந்தாக வந்துள்ள ‘பூக்கி’ சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
With Love: 10 நாளில் 5 மடங்கு லாபம்.. 'வித் லவ்' செய்த மேஜிக்.. அடேங்கப்பா! இத்தனை கோடிகள் வசூலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved