MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

மார்ச் 13ந் தேதி ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஆகிய தளங்களின் வெளியீடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2026, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
OTT Release Movies and Web Series on March 13
Image Credit : X

OTT Release Movies and Web Series on March 13

தமிழ் திரையுலகில் வார வாரம் புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடியிலும் புதுப்படங்கள் வார வாரம் போட்டி போட்டு ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்த வாரம் கூட ஒரு புதுப்படம் மற்றும் இரண்டு வெப் தொடர்கள் நேரடியாக ஓடிடிக்கு வருகின்றன. அதேபோல் சன் நெக்ஸ்ட், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

28
கருப்பு பல்சர்
Image Credit : Asianet News

கருப்பு பல்சர்

தினேஷ் நடிப்பில் வெளியான ட்ராமா படம் தான் இந்த கருப்பு பல்சர். லப்பர் பந்து வெற்றிக்கு பின் தினேஷ் நடித்த படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம்‌ தியேட்டரில் மண்ணை கவ்வியது. இப்படம் வருகிற மார்ச் 13ந் தேதி ஓடிடிக்கு வருகிறது. டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

Related Articles

Related image1
காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?
Related image2
கராத்தே பாபு எங்களுக்கு வேண்டாம்... ஜகா வாங்கிய ஓடிடி நிறுவனம்..? ரூ.32 கோடி போச்சு...!
38
யோகிடா
Image Credit : Instagram

யோகிடா

சாய் தன்ஷிகா நடிப்பில் வெளியான ஆக்சன் படம் தான் யோகிடா. இப்படமும் தியேட்டரில் அட்டர் பிளாப் ஆனது. இப்படத்தை தற்போது ஓடிடிக்கு கொண்டு வர உள்ளனர். வருகிற மார்ச் 13-ந் தேதி முதல் இப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

48
மேட் இன் கொரியா
Image Credit : X

மேட் இன் கொரியா

ப்ரியங்கா மோகன் நடிப்பில் "நித்தம் ஒரு வானம்" கார்த்திக் இயக்கத்தில் வரவுள்ள படம் தான் மேட் இன் கொரியா. இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படம் மார்ச் 13-ந் தேதி முதல் ஓடிடியில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆக உள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

58
பூக்கி
Image Credit : Poster

பூக்கி

விஜய் ஆண்டனி தயாரிப்பு மற்றும் இசையில் "மார்கன்" அஜய் திஷான் நடிப்பில் வெளியான படம் பூக்கி. காதலர் தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில், இப்படம் ஓடிடிக்கு வர உள்ளது. மார்ச் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் பூக்கி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

68
லாக்டவுன்
Image Credit : youtube.com/@LycaProductions

லாக்டவுன்

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான ட்ராமா படம் லாக்டவுன். லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இப்படத்தை ஓடிடிக்கு கொண்டு வந்துள்ளனர். இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

78
வெப் சீரிஸ்
Image Credit : X

வெப் சீரிஸ்

"எருமை சாணி" விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள காமெடி வெப் சீரிஸ் தான் ரிசார்ட். இந்த வெப் சீரிஸ் மார்ச் 13ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. இதுதவிர லோக்கல் டைம்ஸ் என்கிற தமிழ் வெப் சீரிஸும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ரிஷிகாந்த், சின்னி ஜெயந்த், நந்திதா ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ், இந்த வாரம் முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

88
பிற மொழி படங்கள்
Image Credit : X

பிற மொழி படங்கள்

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற கப்புள் ஃபிரெண்ட்லி என்கிற காதல் படம்‌ மார்ச் 13 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ரவி தேஜா நடிப்பில் வெளியான காதல் காமெடி படமான Bhartha Maha sayulaku Wignyapthi மார்ச் 13 முதல் ஜீ5ல் ஸ்ட்ரீம் ஆகிறது. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற Pennum Porattum என்கிற படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் இருந்து வரவுள்ள காதல் காமெடி படம் Funky மார்ச் 13 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் வரவுள்ள அஷபிரண்ட் சீரிஸ் இன் மூன்றாவது சீசன் அமேசான் பிரைமில் வரவுள்ளது. ஹிந்தி படமான The Taj Story வருகிற மார்ச் 13 முதல் Lionsgate Play ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ஜூட்டோபியா படத்தின் இரண்டாவது பாகம் மார்ச் 13 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
Latest Videos
Recommended Stories
Recommended image1
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?
Recommended image2
Vijayakanth: ஃபீல் குட் சாங்.! ரசிகர்கள் கொண்டாடிய "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்".! துள்ளி குதிக்க வைத்த இளையராஜா.!
Recommended image3
பட்டிமன்றம் டூ பணக்காரர் - காமெடி ஜாம்பவான் மதுரை முத்துவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Related Stories
Recommended image1
காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?
Recommended image2
கராத்தே பாபு எங்களுக்கு வேண்டாம்... ஜகா வாங்கிய ஓடிடி நிறுவனம்..? ரூ.32 கோடி போச்சு...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved