MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?

காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ், கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகி வரும் நிலையில், அப்படத்திற்கு ஓடிடி தளமான அமேசான் பிரைம் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறதாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 21 2026, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Movie heading Towards Loss
Image Credit : X

Jana Nayagan Movie heading Towards Loss

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது. அப்படத்திற்கு எதிராக சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளதால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தத்தளித்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9-ந் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டாலும், சென்சார் போர்டு உடனே தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை வாங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிக்கலில் ஜனநாயகன்
Image Credit : X

சிக்கலில் ஜனநாயகன்

பின்னர் இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். அநேகமாக இந்த வழக்கில் படக்குழுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், சென்சார் போர்டு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. அப்படி உச்ச நீதிமன்றத்தை நாடினால், வழக்கு விசாரணை மீண்டும் இழுத்தடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு மேலும் சிக்கல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

34
நெருக்கடி கொடுக்கும் ஓடிடி தளம்
Image Credit : X

நெருக்கடி கொடுக்கும் ஓடிடி தளம்

அதில் முதல் சிக்கல் என்னவென்றால், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கி உள்ள அமேசான் பிரைம் நிறுவனம், ஜனநாயகன் படக்குழு மீது வழக்கு தொடரும் அபாயம் உள்ளது. ஓடிடி தளங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை வைத்து அதன் ஓடிடி வெளியீட்டு தேதியை லாக் செய்துவிடுவார்கள். ஜனநாயகன் தள்ளிப்போவதால் அதன் ஓடிடி வெளியீடும் தள்ளிப்போகும், அதனால் அவர்கள் பட்டியலிட்டுள்ள மற்ற படங்களின் வெளியீடும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கூட ஓடிடி தளத்தின் நெருக்கடியை காரணம் காட்டி, கேவிஎன் தரப்பு வாதங்களை முன்வைத்து இருந்தது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடிக்கு வாங்கி உள்ளது.

44
நஷ்டம்
Image Credit : X

நஷ்டம்

மற்றொரு புறம் இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தற்போது கடும் நெருக்கடி கொடுக்கிறார்களாம். அவர்கள் கடன் வாங்கி இந்த படத்தில் உரிமத்தை கைப்பற்றி இருப்பதால், இந்த தாமதம், அவர்களுக்கு மேலும் மேலும் கடன் சுமையை அதிகரிப்பதாக குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம். அதேபோல் இப்படத்திற்காக தியேட்டர்களை ஒதுக்கீடு செய்திருந்த திரையரங்க உரிமையாளர்களும், இப்படம் ரிலீஸ் ஆகாததால் நஷ்டமடைந்துள்ளார்களாம். இதுதவிர, இப்படத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கினால், படக்குழுவுக்கும் 50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Related Stories
Recommended image1
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!
Recommended image2
Jananayagan: ஒரு படம்… பல பிரச்சனைகள்! ‘ஜனநாயகன்’ ஏன் இலக்காகிறது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved